செய்தியாளர்: படத்துக்கு ஏன் ‘வாக்-இன் இண்டர்வியூ’ன்னு பேர் வெச்சிருக்கீங்க?
இயக்குநர்: அப்படியாவது இளைஞர்கள் அடிச்சு பிடிச்சு படம் பார்க்க வருவாங்களோன்னு ஒரு நப்பாசைதான்.
நபர் – 1: ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’-ங்கிற கொள்கையோட ஒரு கட்சி ஆரம்பிச்சீங்களே எப்படி நடக்குது?
நபர் – 2: அதில் ஒரே தலைவர் ஒரே உறுப்பினர்னு ஆயிடுச்சு.
நண்பன் – 1: எனக்கு பொழுதே போகமாட்டேங்குது.
நண்பன் – 2: ஏதாவது சினிமாவுக்கு போகிறதுதானே.
நண்பன் – 1: ஆபீஸ்லே அதுக்கெல்லாம் பெர்மிஷன் கொடுக்கமாட்டாங்களே.
நபர் – 1: ‘கோடிக் கோடியா சம்பாதிக்க வழி’ன்னு ஒரு புத்தகம் எழுதினீங்களே, என்னாச்சு?
நபர் – 2: அது என்னைத் தெருக்கோடியிலே நிறுத்திடுச்சு.
நபர் – 1: அந்த ஆள் கால்படாத இடமே இல்லை இந்தியாவுல.
நபர் – 2: அப்படியா?!
நபர் – 1: ஆமா. கீழே கிடந்த இந்தியா மேப்பை முழுசா மிதிச்சுட்டாரு.
“