நண்பர் – 1: உங்க மகன் சிகரெட் பிடிக்கிறான். உங்களுக்கு தெரியுமா?
நண்பர் – 2: எனக்கு சிகரெட் பிடிக்கத் தெரியாதுங்க.
நபர் – 1: நான் உனக்கு கொடுத்த கடன் என்னாச்சு? வர வர எனக்கு ஞாபக மறதி அதிகமாயிட்டே வருது.
நபர் – 2: கொஞ்ச நாள் பொறுத்துக்குங்க சார்!
நபர் – 1: எவ்வளவு நாள்?
நபர் – 2: உங்களுக்கு முழுசா மறதி ஏற்படுற வரைக்கும்.
பெண் – 1: இலவசம்னா என் கணவர் எதையும் விடமாட்டார்.
பெண் – 2: அப்படியா?
பெண் – 1: பின்னே பாரேன், இப்போ இலவசத் திருமணம் செஞ்சுக்கிட்டு வந்திருக்கார்.
வக்கீல்: ஏன் கபாலி உன் மனைவியை விஷம் வச்சி கொல்லப் பார்த்தே?
கபாலி: அவ என்னை ரசம் வச்சி கொல்லப்பாத்தா எசமான்!
நண்பன் – 1: ஏன் தினமும் கோயில்ல உங்க மனைவிக்கு அர்ச்சனை பண்றீங்க?
நண்பன் – 2: வீட்டுல அவ தினமும் எனக்கு அர்ச்சனை பண்றாளே. அதான் திருப்பி நான் கோயில்ல பண்றேன்.
“
நல்ல ஞாபகமறதி இப்படியும் மனித ஜென்மம் உண்மையிலே வாழ்கிறது
இது. கடன் வாங்கியவனை விட கொடுத்தவன் சீக்கிரம் போய் சேர வேண்டியது தான் .நகைச்சுவையாக உலக நடப்பை விளித்தவிதம் நல்ல கருத்து