பேட்டியாளர்: 20 வருஷம் முன்னாடி நீங்க எழுதின கதைகளை இப்பப் படிச்சாலும் நீங்களா இப்படி எழுதினீங்கன்னு ஆச்சரியமா இருக்கு!
எழுத்தாளர் – 2: உங்களுக்கு ஆச்சரியம்; மத்தவங்களுக்கு சந்தேகம்.
******
நண்பன் – 1: சிகை அலங்காரம் பண்ற பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே என்னாச்சு?
நண்பன் – 2: பின்னி எடுத்திட்டா.
*****
நபர் – 1: என் மனைவிக்கு என் மேலே கோபம்னா சமைக்கமாட்டா.
நபர் – 2: உனக்கு பரவாயில்லை. என் மனைவிக்கு என் மேலே கோபமா இருந்தா மட்டும்தான் சமைப்பா.
*****
நண்பர் – 1: ஆபீஸில எல்லாரும் என்னை குத்தம் சொல்றாங்க.
நண்பர் – 2: என்னன்னு?
நண்பர் – 1: தூங்கினா நான் எழுந்துக்கறதேயில்லையாம்.
*****
நண்பன் – 1: உன்னை யாராவது லூஸூன்னு சொன்னா கவலைப்படாதே, வருத்தப்படாதே, ஃபீல் பண்ணாதே.
நண்பன் – 2: வேற என்ன செய்யறது?
நண்பன் – 1: உங்களுக்கு எப்படித் தெரியும்னு கேளு.
*****
நண்பன் – 1: சிகை அலங்காரம் பண்ற பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே என்னாச்சு?
நண்பன் – 2: பின்னி எடுத்திட்டா.
சூப்பர் !