நண்பன் – 1 : பொண்டாட்டிங்கள்லாம் போலீஸ் மாதிரிடா.
நண்பன் – 2 : எப்படிச் சொல்றே?
நண்பன் – 1 : நாம செஞ்ச தப்புக்கான எல்லாத் தடயங்களும் கிடைச்சாலும் நாம உண்மையைச் சொல்ற வரைக்கும் விடவே மாட்டாங்க!
மனிதன் : ஆண்டவா! உலகத்தில இருக்குற எல்லாவிதமான கஷ்டம், சோதனை, வேதனைன்னு எல்லாத்தையுமே நீ எனக்குக் குடுத்தாலும் நான் சந்தோஷமாத் தாங்கிக்குவேன்.
ஆண்டவன் : இதுக்குப் பதிலா, எனக்குக் கல்யாணம் செய்துக்கணும், அதுக்கு ஒரு பொண்ணு தேவைன்னு நீ நேரடியாவே சொல்லியிருக்கலாம்.
கணவன் : வர வர என் பாஸ் ரொம்பத்தான் திட்டுறாரு!
மனைவி : ஏன் என்ன சொன்னாரு?
கணவன் : இன்னிக்கு என்னைப் பாத்து ‘கோ டூ ஹெல்’னாரு.
மனைவி : அடப்பாவி! அப்புறம்…?
கணவன் : நான் பேசாமக் கிளம்பி வீட்டுக்கு வந்துட்டேன்.
நடனப்பள்ளி ஆசிரியர் : சாரிடா! நீ போன் செஞ்சப்போ என்னாலே பேச முடியலை.
நண்பன் : ஏண்டா, என்ன செய்திட்டிருந்தே?
நடனப்பள்ளி ஆசிரியர் : நீ போன் செஞ்சப்போ அந்த ரிங்டோனுக்கு டான்ஸ் ஆடிட்டு இருந்தேன். அதனால எடுத்துப் பேசமுடியலை.
“