பெண் – 1: உடம்பைப் பாத்துக்கறதுல என் கணவர் கில்லாடி.
பெண் – 2: அப்படியா?
பெண் – 1: பின்னே, தேஞ்சு போயிரும்னு சொல்லி, சமயத்துல பல்லே தேய்க்கமாட்டாருன்னா பார்த்துக்கோயேன்.
*****
பெண் – 1: என் மகளுக்குக் கல்யாணம் நிச்சயமான நாள்ல இருந்து தினமும் எங்கூட சண்டை போடுறா.
பெண் – 2: ஏன் அவளுக்கு மாப்பிள்ளை பிடிக்கலையா?
பெண் – 1: அப்படியெல்லாம் இல்லை. மாமியார் கூட சண்டை போடுறதுக்காகப் பயிற்சி எடுக்குறா.
*****
பெண் – 1: என் மாமியார் கூட இன்னிக்குப் பெரிய சண்டை.
பெண் – 2: எதுக்கு?
பெண் – 1: நாளையில இருந்து சண்டையே போடக்கூடாதுன்னு அவங்க சொன்னாங்க. நான் இன்னையில இருந்தே சண்டை போட வேண்டாம்னு சொன்னேன். அவங்க அதுக்கு ஒப்புக்கலை. அதுக்குதான் பெரிய சண்டை வந்திடுச்சு.
*****
பெண் – 1: நேத்து என் வீட்டுக்குத் திருட வந்தவனுக்கு நானே பணம் கொடுத்து அனுப்பினேன்.
பெண் – 2: எதுக்காக?
பெண் – 1: பீரோ சாவியைக் கொடுக்கமாட்டேன்னு சொன்ன என் மாமியாரை அடி பின்னி எடுத்திட்டானே.
*****
நபர் – 1: உங்க வீட்டு டீ.வி-ல ராத்திரி பத்து மணிச் செய்திகள் வரும்போது மட்டும் படம் ஏன் சின்னதா தெரியுது?
நபர் – 2: அது செய்திச் சுருக்கமாச்சே!
*****