லக… லக… ஜோக்ஸ் (58)

பெண் – 1: நம்ம தேவிக்கும் அவ புருஷனுக்கும் ஞாபக மறதி ரொம்ப அதிகமாகிடுச்சு.

பெண் – 2: எப்பிடி சொல்ற?

பெண் – 1: அவங்க குழந்தைக்குப் பேர் வைக்கக்கூட மறந்து போய்ட்டாங்கன்னா பார்த்துக்கோயேன்.

*****

பெண் – 1: என்னைக் காதலிச்சவரை நம்பிக் கல்யாணம் செய்துக்கிட்டேன். ஆனா, அவர் என்னை இப்படி மோசம் செய்வாருன்னு நான் நெனச்சே பாக்கல.

பெண் – 2: அப்பிடி என்னதான் செஞ்சாரு?

பெண் – 1: சமைக்கத் தெரியும்னு சொல்லி என்னை ஏமாத்திட்டாரு.

*****

பெண் – 1: சினிமாவுக்குப் பாட்டெழுதுறவரை காதலிச்சது தப்பாப் போச்சு.

பெண் – 2: ஏன்?

பெண் – 1: காதல் பேயே, காதல் பிசாசேன்னு கொஞ்சறாரு.

*****

பெண் – 1: என்னோட முறைமாமன் பெரிய ரவுடி.

பெண் – 2:
சரியான வன்முறைமாமன்னு சொல்லு!

*****

பெண் – 1: என் புருஷன் கொஞ்சங்கூட வெவரம் தெரியாதவரா இருக்காரு.

பெண் – 2: என்ன பண்ணாரு?

பெண் – 1: வீட்டைக் கூட்டி பெருக்குறதுக்குக் கால்குலேட்டர் வாங்கி வந்திருக்காரு.

*****

About The Author