நோயாளி: பல்லைப் பிடுங்கினதுக்கு அப்புறம் வலி இருக்குமா டாக்டர்?
டாக்டர்: பல்லை பிடுங்கினதுக்கு அப்புறம் அதுக்கு வலிச்சா என்ன, வலிக்காட்டி உங்களுக்கு என்ன?
*****
டாக்டர்: வாய்ல ஏன் கட்டு போட்டிருக்கீங்க?
நோயாளி: நீங்கதானே டாக்டர் போன தடவை வந்தப்போ, எனக்குக் கொழுப்பு அதிகமாயிடுச்சு வாயைக் கட்டணும்னு சொன்னீங்க?
*****
டாக்டர்: உங்க பிரச்சினைக்கு என்ன காரணம்னு தெரியலை. ஒரு வேளை அளவுக்கதிமாக் குடிச்சதால இருக்கலாம்னு நினைக்கிறேன்.
நோயாளி: பரவாயில்லை டாக்டர். நீங்க எப்போ குடிக்காம இருப்பீங்கன்னு சொல்லுங்க, நான் வரேன்.
*****
நோயாளி: எனக்குப் பல் ரொம்ப வலிக்குது டாக்டர்!
டாக்டர்: கவலைப்படாதீங்க! வலிக்கிற பல்லை பிடுங்கிடலாம்.
நோயாளி: நல்லவேளை! நீங்க கண் மருத்துவத்துக்குப் படிக்காம போனீங்களே!
*****
மனைவி: டாக்டர்! என் கணவருக்கு சில நேரங்கள்ல என்னை அடையாளம் தெரியறதில்லை போலிருக்கு.
டாக்டர்: எதை வெச்சு சொல்றீங்க?
மனைவி: சில சமயங்கள்ல அவர் என்னைப் பார்த்துப் பயப்படமாட்டேங்கறாரு.
*****
very very super