லக… லக… ஜோக்ஸ் (44)

டாக்டர்: எதுக்கு நர்ஸ் கையை நீங்க தடவிக் குடுத்துட்டு இருக்கீங்க?

நோயாளி: நீங்கதானே டாக்டர் சொன்னீங்க… ஊசி போட்ட கைய தடவிக் குடுங்கன்னு!

                                                         *****

நர்ஸ் – 1: ஆப்ரேஷன் முடிஞ்சு தையல் போடுற நேரத்துலதான் நம்ம டாக்டர் போலின்னு தெரிஞ்சுது.

நர்ஸ் – 2: எப்படி?

நர்ஸ் – 1: தையலை சாதா நூல்ல போடலாமா, சிந்தடிக் நூல்ல போடலாமான்னு என்கிட்டே கேட்டாரு.

                                                        *****

நர்ஸ்: எட்டு மணிக்கு மேலே நோயாளிகள் தவிர மத்தவங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கக்கூடாது.

பார்க்க வந்தவர்: மீறி இருந்தா…?

நர்ஸ்: அவங்களையும் அட்மிட் செஞ்சிடுவோம்.

                                                        *****    
டாக்டர்: ஆப்ரேஷன் முடிஞ்சு ரெண்டு நாள்ல நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.

நோயாளி: அப்போ, ஆட்டோவுக்குக் கூடக் காசில்லாம எல்லாத்தையும் பிடுங்கிட்டுதான் விடுறதுன்னு தெளிவா இருக்கீங்க!

                                                      *****
     
டாக்டர்: உங்க மாமியாருக்கு ஆப்ரேஷன் பண்ணனும். அதுக்கு ரெண்டு லட்ச ரூபாய் ஆகும்.

மருமகள்: என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமாக் கேக்கறீங்க?!

                                                     *****

About The Author