லக… லக… ஜோக்ஸ் (42)

ஜோதிடர்: இந்த ஜாதக அமைப்புக்கு பணம் கொட்டோ கொட்டோன்னு கொட்டும்!

வந்தவர்: அப்படின்னா… இந்த ஜாதகத்தை வெச்சுக்கிட்டு ரெண்டு லட்சம் பணம் கொடுங்க ஜோசியரே!

*****

தொண்டர் – 1: நம்ம கூட்டணியிலிருந்து எதிர்க் கட்சிக்குப் போன அந்த ராமசாமியைப் பத்தி கூட்டத்துல எப்படிப் பேசணும்
தலைவரே?

தலைவர்: நம்பிக்கைத் துரோகின்னு பேசு!

தொண்டர் – 1: ஒருவேளை, அவர் திரும்ப நாளைக்கே நம்ப பக்கம் வந்துட்டா…?

தலைவர்: நம் குடும்பத்திலிருந்து பிரிந்து சென்று மீண்டும் இணைய வந்துள்ள உடன்பிறப்பேன்னு பேசிடலாம்.

*****

தொண்டர் – 1: கட்சிப் பொருளாளர் பொய்க்கணக்கு காட்டுறதை தலைவர் எப்படிக் கண்டுபிடிச்சார்?

தொண்டர் – 2: பிரச்சார பீரங்கிக்கு வெடிமருந்து வாங்கின செலவுன்னு ஒரு தொகையை கணக்குல எழுதியிருந்தாராம்!

*****

நபர்: என்ன தைரியம் இருந்தா, பிச்சை கேக்க ஆபீசுக்கே வருவே?

பிச்சைக்காரன்: வீட்டிலே போய்க் கேட்டேன். அம்மாதான் ஐயா ஆபீசுக்கு போயிட்டாங்கன்னு சொன்னாங்க!

*****

நண்பர் – 1: என் மனைவி என்னை லூஸூ, முட்டாள், கிறுக்குன்னு அடிக்கடி திட்டுறா. உங்க மனைவி எப்படி?

நண்பர் – 2: உங்களைப் பத்தி அவளுக்கு அவ்வளவு தெரியாதுங்க!

*****

About The Author