கணவன்: அன்பே! உனக்காக நான் தாஜ்மஹால் எழுப்பவா, கோவில் எழுப்பவா?
மனைவி: உக்கும்! தூங்கும்போது எழுப்பாம இருந்தா பத்தாதா?
******
நபர் – 1: கோர்ட்டுல என்ன டமால்னு சத்தம்?
நபர் – 1: சாட்சி பல்டி அடிச்சிட்டாராம்!
******
புதுக் கணவன்: என் பொண்டாட்டி இது வரைக்கும் சமையல்கட்டு பக்கமே போயிருக்க மாட்டான்னு நினைக்கிறேன்!
நண்பன்: எப்படி சொல்றே?
புதுக் கணவன்: இன்னிக்குக் காலைல அவ முட்டையை சோடா ஓபனரை வச்சுத் திறக்க முயற்சி பண்ணிக்கிட்டிருந்தா!
******
ஜோசியர்: கவலைப்படாதேம்மா! உன் ஜாதகப்படி நீ காதலிக்கிறவனைதான் கல்யாணம் பண்ணிப்பே.
பெண்: இப்படி மொட்டையா சொன்னீங்கன்னா எப்படி? ரமேஷா, சுரேஷா, கோபுவா, சோமுவா, ராமுவா, விஜயா, அஜயா யாரைன்னு சரியா சொல்லுங்க!
******
வரன்: டிபன் நல்லாருக்கு… பொண்ணுதான் பிடிக்கலே!
பெண்ணின் அப்பா: இட்லிக்கு ஊறப் போட்டிருக்கோம்… குடும்பத்தோட அப்படியே உள்ளே வந்து மரியாதையா அரைச்சுக் குடுத்துட்டு போங்க, ஆமா!
******
“