லக… லக… ஜோக்ஸ் (38)

ஒருவர்: நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது, தெரியாம பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன்.
மற்றவர்: அப்புறம்?
ஒருவர்: "களைப்பா வந்திருப்பீங்க… காபியோட வரேன்"னு குரல் கேட்டது. சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன்.

——————–

மருமகள்: ஹலோ! டாக்டர் என் மாமியார் இப்ப எப்படி இருக்காங்க?
டாக்டர்: கவலைப்படாதீங்க! உங்க மாமியார் பிழைச்சிட்டாங்க. இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தாக்கூட நீங்க அவங்களை உயிரோட பார்த்திருக்க முடியாது.
மருமகள்: எல்லாம், பாழாப் போன அந்த ஆட்டோக்காரனால வந்தது!

——————–

நபர் – 1: ஹலோ! 224326-தானே?
எதிர்முனை: யாருய்யா அது, டெலிபோன்ல வாய்ப்பாடெல்லாம் சொல்றது?

——————–

ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு நாய் பலமாகக் குரைக்கும் சத்தம் கேட்டது. அதனால் மேற்கொண்டு நடத்த முடியாமல் அமைதியாக இருந்தார். சிறிது நேரம், கழித்து நாய் அமைதியானது.
மாணவன் ஒருவன் சொன்னான், "ஐயா! நாய் நிறுத்திடுச்சு. நீங்க ஆரம்பிங்க!".

——————–

தொகுப்பாளினி: ஹலோ! வணக்கம்! நீங்க எங்கே இருந்து பேசறீங்க?
நேயர்: தண்டபாணி தெரு, டி.நகர்.
தொகுப்பாளினி: அட! நானும் அங்கதான் இருக்கேன். உங்க டோர் நம்பர்?
நேயர்: 110.
தொகுப்பாளினி: அட! என் வீட்டு நம்பரும் அதேதான். நீங்க யாரு?
நேயர்: பண்டாரம்… பண்டாரம்! நான்தாண்டி உன் புருஷன். வீட்டு சாவியை எங்க வெச்சுத் தொலைச்ச?

About The Author

1 Comment

Comments are closed.