நண்பன் – 1: நான் இந்த அளவுக்கு சம்பாதிக்கறதுக்குக் காரணம் என் மனைவிதான்.
நண்பன் – 2: அவங்க தரும் ஊக்கமா?
நண்பன் – 1: இல்ல, அவ பண்ற செலவு.
தோழி – 1: குடுமி பின்னி, பூவெல்லாம் வைச்சுக்கிட்டு கிராமத்துலேர்ந்து வந்திருக்காரே உன் சித்தப்பா, அவர் பேரு என்ன?
தோழி – 2: பூச்சடையான்!
நண்பர் – 1: என் மனைவி எப்போ சொன்னாலும், எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காம உப்புமா செஞ்சு தருவா!
நண்பர் – 2: உப்புமாவில வண்டும் புழுவுமா இருக்கிறப்பவே நினைச்சேன், சலிக்காமதான் செஞ்சிருப்பாங்கன்னு.
வீட்டுக்கு வழி தெரியாமல் அழுதுகொண்டிருக்கும் சிறுவனிடம் ஒருவர்…
நபர்: உங்க வீடு எங்கப்பா இருக்கு?
சிறுவன்: அரச மரத்துக்கு எதிர்ல சார்.
நபர்: அரச மரம் எங்கே இருக்கு?
சிறுவன்: எங்க வீட்டுக்கு எதிர்ல சார்.
நபர்: சரி, உங்க வீடும் அரச மரமும் எங்கே இருக்கு?
சிறுவன்: எதிரும் புதிருமா இருக்கு சார்.
ஆசிரியர்: கோழியின் வயதை எப்படிக் கண்டுபிடிப்பாய்?
மாணவன்: பல்லாலதான்.
ஆசிரியர்: கோழிக்குத்தான் பல்லே இல்லையே?
மாணவன்: எனக்கு இருக்குதே!
“