லக… லக… ஜோக்ஸ் (36)

தொண்டர் – 1: நம்ம தலைவருக்குப் புராணங்கள்னா ரொம்பப் புடிக்கும்னு எப்படி சொல்ற?

தொண்டர் – 2: அவரு வீட்டுல, பெட்ரூமுக்குக் ‘கும்பகர்ண ரூம்’னும், டைனிங் ஹாலுக்கு ‘சாப்பாட்டு ராமன் ஹால்’னும் பேரு வச்சிருக்காருன்னா பார்த்துக்கோயேன்!

*******

தோழி – 1: மாட்டுப் பொங்கலை இவ்வளவு விசேஷமா கொண்டாடுறே சரி… உன் வீட்டுக்காரரை காணலியே?

தோழி – 2: நல்லாப் பாருடி! மாடு வேஷத்துல நிக்கறதே அவர்தான்!

*******

சாப்பிட வந்தவர்: கத்திரிக்கா சாம்பார், முருங்கைக்காய் சாம்பார் ஓகே, அது என்னய்யா அது கோல்டு சாம்பார்?

சர்வர்: அதுல 24 காரட் போட்டிருக்கு… அதான்!

*******

மேலதிகாரி: என்னது, மின்னணு ரேஷன் கார்டுக்கு விரல் ரேகை பதிவு பண்ற மிஷின் ரிப்பேராயிடுச்சா? எப்பிடிய்யா?

ரேகை எடுக்கும் அதிகாரி : நகச்சுத்திக்காக சொருகியிருந்த எலுமிச்சம்பழத்தோட எவனோ அழுத்தித் தொலைச்சுட்டான் சார்!

*******

கணவன்: இனிமே, நமக்குள்ள நடக்கிற விஷயம் நாலுபேருக்கு தெரியற மாதிரி நடந்துக்கக் கூடாது!

மனைவி: சொல்றதுல ஒண்ணும் குறைச்சலில்லே! நீங்கதான் நான் அடிச்சா ஊருக்கே கேக்குற மாதிரி கத்தறீங்களே!

About The Author