நடிகை: வர வர எனக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு சார்!
இயக்குநர்: எப்படி சொல்றீங்க?
நடிகை: கல்யாணம் முடிஞ்சு மூணு மாசமாகியும் இன்னமும் அவரை டைவர்ஸ் பண்ணாம இருக்கேனே!
நோயாளி: காலில் அடிபட்டதுக்கு தலையில ஏன் எக்ஸ்ரே எடுக்கறீங்க டாக்டர்?
டாக்டர்: சாக்கடையில நீங்க காலை விட்டபோது உங்க மூளை எங்கே போச்சுன்னு பாக்க வேணாமா?
நண்பன் – 1: கோர்ட்ல நமீதாவை நீதிபதியா நியமிச்சா எப்படி இருக்கும்?
நண்பன் – 2: குற்றவாளியைப் பார்த்து உங்க ஆட்டிடியூட் நல்லா இருந்துச்சு! கொலை எனர்ஜட்டிக்கா இருந்துச்சு! கீப் இட் அப் மச்சான்! உங்களுக்கு பத்து மார்க் தரேன்னு சொல்லுவாங்க!
நண்பன் – 1: உங்க அப்பாகிட்ட 5000 ரூபாய் பணம் கேட்டு லெட்டர் போட்டியே, அனுப்பிச்சாரா?
நண்பன் – 2: இல்லடா! 50 ரூபாய்க்கு நாலு சைபர் போடக்கூடாதுன்னு திட்டி லெட்டர் போட்டிருக்கிறாருடா!
ஆசிரியர்: என்ன சார், உங்க மகன்கிட்ட அமெரிக்காவை கண்டுபிடிச்சது யாருன்னு கேட்டா, ‘சத்தியமா நான் இல்லவே இல்லை சார்’னு சொல்றான்?
தந்தை: அவன் கொஞ்சம் பயந்த சுபாவம் சார்! கொஞ்சம், மிரட்டாம பதவிசாக் கேளுங்க, கண்டிப்பா ஒத்துக்குவான்.
“