லக… லக… ஜோக்ஸ் (3)

தொலைக்காட்சி நிருபர் : மேலேயிருந்து பாம் விழும்போது ரொம்ப வேகமாக விழுந்துதா?
காயம்பட்ட மனிதர் (எரிச்சலுடன்) : இல்லைங்க. அப்படியே தவழ்ந்து தவழ்ந்து என்கிட்டே வந்து, ரொம்பவும் வெக்கப்பட்டு ‘டமார்’னு சொல்லிச்சு.

**********

மனைவி : நீங்க எங்க இருக்கீங்க?
கணவன் : உனக்கு அந்த நகைக் கடை ஞாபகம் இருக்கா? உனக்குக் கூட அங்கே இருந்த ஒரு வைரத்தோடு ரொம்பப் பிடிச்சுதே, ஆனால் என்கிட்டே பணம் இல்லாததாலே வாங்க முடியாம போச்சே, ஒருநாள் இல்லை ஒருநாள் கண்டிப்பாக வாங்கி தருவேன்னு நான் கூட சொன்னேனே, ஞாபகம் இருக்கா?
மனைவி (சந்தோஷமாக) : எனக்கு நல்லா ஞாபகம் இருக்குங்க. சொல்லுங்க!
கணவன் : அதுக்குப் பக்கத்தில் இருக்கும் சலூனில்தான் இருக்கேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துடுவேன்.

**********

முடி திருத்தகத்துக்குச் சென்ற பேய்,

முடி திருத்துபவர் : இப்போ கொஞ்சம் பிஸியா இருக்கேன். அப்புறமா வா!
பேய் : ஒண்ணும் அவசரமில்லை. என்னுடைய தலையை இங்கே கழட்டி வெச்சிட்டுப் போறேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இதுக்கு ஸ்டெப் கட்டிங் செய்திடுங்க.

**********

நூலகத்தில்,

நபர் : தற்கொலை செய்துகொள்வது எப்படின்னு சொல்லும் புத்தகம் இருக்கா?
நூலகர்: இருக்கு. ஆனால் புத்தகத்தை யாரு வந்து திருப்பிக் கொடுப்பாங்க?

**********

பிச்சைக்காரன் – 1 : நேத்து ஒருத்தன் எங்கிட்டே வந்து, உன்னுடைய வருமானம் எவ்வளவுன்னு கேட்டான். ஆனால் நான் பேசாம இருந்துட்டேன்.
பிச்சைக்காரன் – 2 : ஏன்?
பிச்சைக்காரன் – 1 : அவன் வருவாய்த்துறை அதிகாரியா இருந்தா?

**********

About The Author