லக… லக… ஜோக்ஸ் (27)

நண்பர் – 1: தினமும் சாயந்தரம் 6 மணி ஆச்சுன்னா வாய்க்கு வந்தபடி நான் என் பொண்டாட்டியைத் திட்டுவேன்.
நண்பர் – 2: அதென்ன 6 மணி கணக்கு?
நண்பர் – 1: அப்போதான் அவ வீட்டுல இருக்கமாட்டா.

*******

நபர் – 1: நேத்து என் பையனை நீங்கதான் ஆத்து வெள்ளத்துலேயிருந்து காப்பாத்துனீங்களாமே?
நபர் – 2: ஹி… ஹி… ஆமாம்! அந்தச் சின்ன விஷயத்துக்குப் போயா நன்றி சொல்ல வந்தீங்க?
நபர் – 1: அதுக்கில்லேங்க… பையன் பாக்கெட்டுல ரெண்டு ரூபா வச்சிருந்தானாமே, அதை நீங்க எடுத்தீங்களா?

*******

வருங்கால மாமனாரிடம் மாப்பிள்ளை,
நீங்க கல்யாணத்தை ரொம்பச் சிக்கனமா நடத்துங்க… வேணாங்கலை! அதுக்காக ஜானவாசத்துல காருக்குப் பதிலா நீங்க என்னை உப்பு மூட்டை தூக்கிண்டு போறது கொஞ்சம் கூட நல்லாயில்லே!

**********

காவலர்: என்னம்மா, உங்க வீட்டுக்காரர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க, ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க?
பெண்: இன்னிக்குத்தான் சார் அவரோட சம்பள நாள்.

**********

தரகர்: மாப்பிள்ளை ஊமை பரவாயில்லையா?
பெண்ணின் தகப்பனார்: பரவாயில்லை… பரவாயில்லை… எப்படியும், கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் வாயைத் திறக்கப் போறதில்லையே!

About The Author