லக… லக… ஜோக்ஸ் (24)

ஒருவர்: காய்ச்சல்னுதானே ஆஸ்பத்திரிக்குப் போனே? அதுக்கா ஆபரேஷன் செய்தாங்க?

மற்றவர்: இல்ல. ஆஸ்பத்திரியில வாயிலே வெச்ச தர்மா மீட்டரை முழுங்கிட்டேன். அப்புறம் ஆபரேஷன் பண்ணிதான் வெளிய எடுத்தாங்க.

************

நண்பர் – 1: நல்லா கலகலப்பா இருந்த உங்க பையன் திடீர்னு இப்படி ஊமை மாதிரி ஆயிட்டானே ஏன்?

நண்பர் – 2: ஒண்ணுமில்லை. போன மாசம்தான் அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைச்சேன்.

************

நோயாளி: எனக்கு வயிற்றெரிச்சல் அதிகமாயிருச்சு டாக்டர்!

டாக்டர்: எப்ப இருந்து…?

நோயாளி: உங்க நர்ஸ் பக்கத்து பெட்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேச ஆரம்பிச்சதிலிருந்து.

************

இரண்டு பேர் காரில் வெடிகுண்டை வைத்துக்கொண்டிருந்தார்கள்.

முதலாமவன்: நாம வைக்கும்போதே இந்த பாம் வெடிச்சுட்டா என்னடா செய்யறது?

அடுத்தவன்: கவலைப்படாதே! என்கிட்டே இன்னொண்ணு இருக்கு.

************

கணவன்: என்ன, இவ்ளோ வெய்ட்டான புடவையை வாங்கிட்டு வந்துருக்க?

மனைவி: உங்களுக்கென்ன? கட்டிக்கப் போறது நான்தானே!

கணவன்: ஆனா துவைக்கப் போறது நானாச்சே!

About The Author

1 Comment

Comments are closed.