லக.. லக… ஜோக்ஸ் (18)

நபர் – 1: என் பொண்டாட்டி என்கிட்டே 1 வருஷமா பேசறதேயில்லை.

நபர் – 2: சரி, நீயாவது அவங்ககிட்டே சமாதானம் செஞ்சிக்கிட்டு பேச வேண்டியதுதானே.

நபர் – 1 : ஏன் நான் சந்தோஷமா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா?

***********

நோயாளி: என்னோட கை ரொம்ப நடுங்குது டாக்டர்.

டாக்டர்: நீங்க நிறைய குடிப்பீங்களோ?

நபர்: எங்க டாக்டர், இந்த நடுக்கத்திலேயே பாதிக்கும் மேலே கொட்டிடுதே!

***********

நபர்: எனக்கு ஒரு ஆம்பளை ஃபேனும், ஒரு பொம்பளை ஃபேனும் குடுங்க!

கடைக்காரர்: அப்படீன்னா?

நபர்: அட, ஒரு பஜாஜ் ஃபேனும், ஒரு உஷா ஃபேனும் குடுங்க!

***********

ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்.

மாணவர்கள்: நீங்க சொன்னது புரியலை சார்!

************

நீதிபதி: நீ செஞ்ச தப்புக்கு பத்தாயிரம் அல்லது ஒரு மாத ஜெயில் தண்டனை. இதுல எது வேணும் உனக்கு?

குற்றவாளி: ஹி… ஹி… பத்தாயிரமே போதும் சாமி! பொட்டிக்கடை வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்.

About The Author