லக… லக… ஜோக்ஸ் (15)

நண்பன் – 1 : டேய்! பெட்ரோல் விலை மறுபடியும் 3 ரூபாய் ஏத்திட்டாங்களாம். கொடுமைடா!

நண்பன் – 2 : எனக்கு அந்தக் கவலையே இல்லடா. நான் எப்பவுமே என் வண்டிக்கு 100 ரூபாய்க்குதான் பெட்ரோல் போடறேன்.

***********

ஆசிரியர் : பூச்சிக் கடியினால வர்ற வியாதிங்களை எப்படி தடுக்கணும்? சொல்லுங்க பார்க்கலாம்!

பப்பு : பூச்சியைக் கடிக்காம இருக்கணும்.

**********

கணவன் : நான் இறந்துபோனா நீ மறுபடியும் கல்யாணம் செய்துக்குவியா?

மனைவி : மாட்டேங்க! நான் என் தங்கச்சி கூடவே இருந்துடுவேன். நான் இறந்துபோனா நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவீங்களா?

கணவன் : சேச்சே! நானும் உன் தங்கச்சி கூடவே இருந்துடுவேன்.

*********

நண்பர் – 1 : தினமும் எனக்காக காலையில் அம்பது பொண்ணுங்க காத்திருக்காங்க தெரியுமா?

நண்பர் – 2 : குடுத்து வச்சவன்யா நீ! ஆமா… என்ன வேல பாக்கறே?

நண்பர் – 1 : லேடீஸ் காலேஜ்ல பஸ் டிரைவர்

*********

வாடிக்கையாளர் : எனக்கு 2013 காலெண்டர் குடுங்க!

கடைக்காரர் : சாரிங்க! எங்ககிட்டே மொத்தமே ஆயிரம் காலெண்டர்தான் இருக்கு.

About The Author