கணவன் : என்ன சமைச்சிருக்கே? சாணி மாதிரி இருக்கு. நல்லாவேயில்ல.
மனைவி : கடவுளே! இவர் இன்னும் என்னவெல்லாம் சாப்பிட்டு பார்த்திருக்காரோ தெரியலையே!
**********
நபர் : சாமி! என் பொண்டாட்டி தொல்லை ரொம்பவே தாங்க முடியல. அவளைத் திருத்த ஏதாவது வழி சொல்லுங்களேன்!
சாமியார் : அது தெரிஞ்சா நான் ஏம்ப்பா சாமியாராகறேன்?
*********
நண்பன் – 1 : என் காதலிக்கு பெருசா ஏதாவது கொடுக்கலாம்னு நினைக்கிறேன். ஏதாவது ஐடியா குடுடா!
நண்பன் – 2 : நல்ல லாரி டயராப் பாத்து வாங்கிக் குடேன்.
**********
மனைவி : நேத்து ராத்திரி தூக்கத்துல நீங்க என்னை எவ்ளோ மோசமா திட்டினீங்க தெரியுமா?
கணவன் : எப்பவும் நீ என்னை தப்பாவே நினைக்குற.
மனைவி : ஏன்?…
கணவன் : நேத்து நான் தூங்கவேயில்லையே.
**********
நண்பர் – 1 : எங்கப்பா ரொம்பப் பெரிய தைரியசாலி தெரியுமா? ஒரு தடவ சிங்கத்தோட கூண்டுக்குள்ளேயே நுழைஞ்சுட்டாரு.
நண்பர் – 2 : கூண்டிலேருந்து வெளியே வரும்போது எல்லாரும் அவரைப் பாராட்டியிருப்பாங்களே?
நண்பர் -1 : எங்கப்பா கூண்டுக்குள்ள போனாருன்னு சொன்னேன். வெளிய வந்தாருன்னு சொன்னேனா?