லக… லக… ஜோக்ஸ் (12)

ஆசிரியர் : உன் பக்கத்தில் உட்கார்ந்திருக்காரே, இவர் யாரு?

பப்பு : பிளம்பர் சார்!

ஆசிரியர் :
இவர் இங்கே என்ன செய்யறாரு?

பப்பு :
இல்ல… கொஸ்டின் பேப்பர் லீக்காயிடுச்சுன்னு சொன்னாங்க. அதான் இவரை கையோட கூட்டி வந்துட்டேன்.

**********

நபர் : ஹலோ! காலிங் பெல் சரியா வேலை செய்யலைன்னு நாலு நாள் முன்னாடி போன் பண்ணியிருந்தேனே?

எலெக்டிரிஷியன் : ஹலோ! நீங்க சொன்னீங்களேன்னு நானும் நாலு நாளா உங்க வீட்டுக்கு வந்துட்டுதான் இருக்கேன். எங்க, காலிங் பெல் அடிச்சா யாரும் வந்து கதவைத் திறக்கவேயில்லையே?

**********

நண்பன் – 1 : டேய் மச்சான்! நான் பர்ஸை வீட்டிலேயே வெச்சிட்டு வந்துட்டேன். அவசரமா ஆயிரம் ரூபாய் தேவைப்படுது, கிடைக்குமா?

நண்பன் – 2 : உனக்கில்லாததாடா? இந்தா இருபது ரூபாய்! வீட்டுக்குப் போய்ப் பர்ஸை எடுத்துட்டு வந்துடு.

**********

நண்பர் – 1 : ஒருத்தர் உயிருக்குப் போராடிக்கிட்டிருக்கும்போது என்ன பண்ணனும்?

நண்பர் – 2 : ஒரு மூட்டை பிர்லா சிமெண்ட் வாங்கிக் குடுக்கணும்.

நண்பர் – 1 :
ஏன்?!

நண்பர் – 2 :
அதுலதானே உயிர் இருக்கு.

*********

கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த இருவர்…

நண்பன் – 1 : ஹே… கோல்!…

நண்பன் – 2 : முட்டாள்! அது கிரிக்கெட்ல.

About The Author