லக… லக… ஜோக்ஸ் (111)

காவலர்: போன்ல உங்களுக்குக் கொலை மிரட்டல் விடுறவன், ஒருவேளை நீங்க ஆபரேஷன் பண்ணுன பேஷண்ட்டுகள்ல யாராவதா இருக்குமோ?

டாக்டர்: எனக்குத் தெரிஞ்சு, அப்படி யாரும் உயிரோட இருக்கிற மாதிரி தெரியலையே!

============

பயணி: யோவ் கண்டக்டர்! பஸ்ஸை நிறுத்து… ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு.

கண்டக்டர்: சும்மா இருய்யா! கண்ட இடத்துல விசில் அடிச்சா டிரைவர் என்னைத் திட்டுவாரு.

பயணி:
யோவ்! விழுந்தே டிரைவர்தான்யா!

============

நண்பன்-1: ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?

நண்பன்-2: பார்த்து பத்திரமா எடுத்து, திருப்பி கடிகாரத்திலேயே மாட்டிடு! இல்லேன்னா மணி பார்க்க முடியாதே!

============

ஆசிரியர்: நரகாசுரனை கொன்னது யாரு?

மாணவன்:
அதை போலீஸ் பார்த்துக்குவாங்க சார். நமக்கெதுக்கு அந்த வம்பெல்லாம்.

===========


தலைவர்:
நடிகையை கட்சில சேர்த்தது தப்பா போச்சு.

பொதுச் செயலாளர்:
ஏன்?

தலைவர்: கட்சிக் கூட்டத்துல பேசுறதுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட்டையும் கூட்டிட்டு வந்திருக்காங்க.

============

About The Author