நண்பன்-1: எங்க அப்பாக்கு எல்லாத்துலேயும் குழப்பம்தாண்டா.
நண்பன்-2: எதனாலடா அப்படி சொல்றே?
நண்பன்-1: பாரேன்! பட்டாசையெல்லாம் கொலு படியிலே வரிசையா வெச்சிட்டு "பொங்கலோ பொங்கல்"னு கூச்சல் போடறாரு.
மருத்துவர்: பாம்புக் கடிக்கு முதலுதவி என்ன தெரியுமா? கடிச்ச எடத்துக்கு மேலும் கீழும் கயிற்றால் கட்டுப் போடணும்.
நோயாளி: தொண்டையிலே பாம்பு கடிச்சாலும் இதே மாதிரி செய்யலாமா டாக்டர்?
ஆசிரியர்: தாஜ்மஹால் எங்கேயிருக்கு?
மாணவன்: ஆக்ராவில இருக்கு சார்.
ஆசிரியர்: சார்மினார் எங்கேயிருக்கு?
மாணவன்: உங்க பாக்கெட்ல சார்.
நபர்-1: உங்க பையன் என்ன செய்யப் போறான்?
நபர்-2: மேலே படிக்க போறான்.
நபர்-1: இஞ்சினியரிங்குக்கா டாக்டருக்கா?
நபர்-2: அட, நீங்க வேற! மாடிக்குப் போய் நாவல் படிக்கப் போறான்.
மாணவன்-1: இன்னிக்கு என்ன, சினிமாவுக்குப் போலாமா பீச்சுக்கா?
மாணவன்-2: வேண்டாம்! இன்னிக்காவது படிக்கப் போலாம்.
மாணவன்-1: சரி, காசை சுண்டி பார்ப்போம். தலை விழுந்தா சினிமா, பூ விழுந்தா பீச், நேரா நின்னா படிக்கப் போலாம். என்ன சரியா?
“