நண்பன்-1: கப்பல் படையில சேர்ந்திருக்கியே உனக்கு நீந்தத் தெரியுமா?
நண்பன்-2: ஏன், விமானப் படையில சேர்ந்திருக்கிற உனக்கு மட்டும் பறக்கத் தெரியுமா?
தொண்டன்: தலைவரே, அகலப்பாதை அமைக்கறதுல ஊழல் செஞ்சதா உங்க மேல வழக்குப் போட்டிருக்காங்க.
தலைவர்: இந்த வழக்குல இருந்து தப்பிக்க குறுக்குப் பாதை ஏதாவது இருக்கா பார்!
நபர்-1: எனக்கு கொஞ்சம் தனிமை கிடைச்சா போதும், பாட ஆரம்பிச்சுடுவேன்.
நபர்-2: அதுக்கு எதுக்கு காத்துக்கிட்டு இருக்கீங்க? நீங்க பாட ஆரம்பிங்க! தன்னாலே தனிமை கிடைக்கும்!
வாடிக்கையாளர்: என்னய்யா பேப்பர் ரோஸ்ட் கசங்கி இருக்கு?
சர்வர்: இது ‘பழைய பேப்பர்’ ரோஸ்ட் சார்!
நிருபர்: டாக்டர், மனுஷனோட உயிர் உடம்பைவிட்டுப் பிரியறதை நாங்க நேரடியா ஒளிபரப்பலாம்னு இருக்கோம்.
டாக்டர்: அதுக்கு நான் என்ன செய்யணும்?
நிருபர்: நீங்க என்னிக்கு ஆபரேஷன் செய்யறீங்கன்னு சொன்னீங்கன்னா நாங்க கேமராவோட வந்திடுவோம்.
“