நண்பன் – 1: உலகத்திலேயே ரொம்ப பணம் கிடைக்குற தொழில் எது?
நண்பன் – 2: தெரியலியே!
நண்பன் – 1: பல் டாக்டர் தொழில்தான்.
நண்பன் – 2: எப்படி?
நண்பன் – 1: அவர்தான் எல்லார் ‘சொத்தை’யும் பிடுங்கறாரே!
பூனை: உன் வயசு என்ன?
யானை: பத்து.
பூனை: ஆனா நீ பாக்கறதுக்கு ரொம்ப பெரிசா தெரியிறியே!
யானை: ஆமாம், ஏன்னா நான் காம்ப்ளான் பாய்.
பூனை: எனக்கு 15 வயசு.
யானை: ஆனா நீ ரொம்ப சின்னதா தெரியிறியே!
பூனை: அதுக்கு காரணம் பாண்ட்ஸ் ஏஜ் மிராக்கிள்.
மாணவன் – 1: வாத்தியாரை விட கோழிதான் பெருசு.
மாணவன் – 2: எப்படி?
மாணவன் – 1: வாத்தியார் முட்டை மட்டும்தான் போடுவார். ஆனா கோழி முட்டை போட்டு குஞ்சும் பொறிக்குமே!
நண்பர் – 1: எலிக்கும், மவுசுக்கும் என்ன வித்தியாசம்?
நண்பர் – 2: எலிக்கு வால் பின்னாடி இருக்கும், மவுசுக்கு வால் முன்னாடி இருக்கும்!
வாத்தியார்: தென்னை மரத்தில இருந்து 6 இலையும், பனை இருந்து 6 இலையும், கீழே விழுது. ரெண்டையும் கூட்டினால் என்ன வரும்?
மாணவன்: குப்பைதான் சார்!
“
சோகம் மறக்க உஙகள் பகுதி. அப்படியே தொடருங்கள். வாழ்த்துக்கள்.