ரோஸ் சிரப்

தேவையான பொருட்கள்:

சர்க்கரை – 600 கிராம் (3 கோப்பை),
தண்ணீர் – 300 மில்லி,
சிட்ரிக் அமிலம் – ¼ தேக்கரண்டி,
ரோஸ் எசென்ஸ் – ஒரு தேக்கரண்டி,
ராஸ்பெர்ரி நிறம் – சிறிதளவு.

செய்முறை:

தண்ணீருடன் சர்க்கரையையும் சிட்ரிக் அமிலத்தையும் கலந்துக் கொதிக்க வையுங்கள். பின்னர், அதைக் குளிர வைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். பிறகு, இதில் எசென்சையும் கலரையும் கலந்து, நன்றாகக் கழுவி உலர்ந்த கண்ணாடிப் புட்டிகளில் நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். இந்த ரோஸ் சிரப்பைப் பாலுடன் சிறிது கலந்து ரோஸ் மில்க் செய்யலாம். பழச்சாறுகளிலும் சேர்த்துப் பருகலாம். சுவைத்துப் பாருங்கள்! உங்கள் அனுபவத்தைப் பகிருங்கள்!

பின் குறிப்பு: எச்சரிக்கை! ஒருபோதும், தண்ணீர் கலக்காமல் சிரப்பை அப்படியே அருந்த முயல வேண்டாம்! தொண்டை அழற்சி ஏற்படும்!

About The Author