ரவை போண்டா

தேவையான பொருட்கள்:

ரவை – ஒரு கோப்பை
புளித்த தயிர் – தேவைக்கேற்ப
தேங்காய்த் துருவல் – ஒரு மேசைக்கரண்டி,
இடித்த பச்சை மிளகாய் – ஒரு தேக்கரண்டி,
சோடா மாவு – ஒரு சிட்டிகை,
கடுகு – 1 தேக்கரண்டி,
எண்ணெய் – பொறிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை:

கடுகையும் எண்ணெயையும் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து கொண்டு, கடுகைத் தாளித்துக் கொட்டுங்கள்.

பிறகு, அடுப்பில் வாணலியை ஏற்றி, எண்ணெயைக் காய வைத்து, கலவையை உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொறித்து எடுக்க, சுவையான ‘ரவை போண்டா’ ரெடி!

இந்த மழைநேரத்து மாலையை இந்த ரவை போண்டாவுடன் அனுபவியுங்கள்!

உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

பி.கு: ரவைக்குப் பதிலாக மைதாவைப் பயன்படுத்தி ‘மைதா போண்டா’வும் செய்யலாம்!

About The Author