ரவா சஜ்ஜிகே

தேவையான பொருட்கள்:

ரவை – ஒரு கப்
தேங்காய் துருவல் – ஒரு மூடி
வெல்லம் – ஒரு கப்
நீர் – சிறிதளவு
நெய் – ஒரு தேக்கரண்டி
முந்திரித் துண்டுகள் – ஏழெட்டு

செய்முறை:

வெறும் வாணலியைக் காய வைத்து ரவையை சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காய்த் துருவலை மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த தேங்காய் விழுதுடன் பொடித்த ரவையைக் கலந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். தலை தட்டி வெல்லத்தை அளந்து கொள்ளவும்.

ஒரு கனமான கடாயில் வெல்லத்தைப் போட்டு சிறிது நீர் சேர்த்துக் கொதிக்க விடவும். வெல்லம் கரைந்தவுடன் ரவை தேங்காய்க் கலவையை சேர்த்து கை விடாமல் மட்டான தழலில் கிளறவும்.

நன்கு பதமாக வந்ததும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சற்று சூடு குறைந்ததும் வில்லைகளாக செய்யவும். சுவையான ரவா சஜ்ஜிகே தயார்.

சஜ்ஜிகே வில்லைகளை நெய்யில் வறுத்த முந்திரித் துண்டுகளைக் கொண்டு அலங்கரிக்கவும்”

About The Author