தேவையான பொருட்கள்:
பால் – 1 ½ லிட்டர்,
முந்திரிப்பருப்பு – 50 கிராம்,
சர்க்கரை – ¼ கிலோ,
பால் மாவு (Milk powder) – 5 தேக்கரண்டி,
கிரீம் பிஸ்கட் – 5,
நிறமூட்டி (food colour) – 2 துளி,
ஏலப்பொடி – சிறிது.
செய்முறை:
பாலை மட்டான தழலில் வைத்துக் கெட்டியாகும் வரை காய்ச்சுங்கள். சிறிது பாலில் முந்திரிப் பருப்பை ஊற வைத்து, தேவையான பதத்தில் அரைத்துக் கொள்ளுங்கள். அடுத்து, பால் மாவை வெந்நீரில் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளுங்கள். பிஸ்கட்டுகளைச் சன்னமாகப் பொடி செய்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் காய்ச்சிய பாலுடன் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். பிறகு, ஏலப்பொடியைக் கலந்து, குளிர்பதனியில் வைத்து இதை உறையச் செய்தால் அசத்தலான முந்திரி ஐஸ்கிரீம் தயார்!
இந்தக் கோடை விடுமுறையில் இதைச் செய்து கொடுத்து உங்கள் குழந்தைகளை அசத்துங்கள்! அந்த அனுபவத்தை எங்களுடன் பகிர மறவாதீர்கள்!