தாங்கள் எனக்கு முதலில்…
கொடுத்த எல்லாவற்றையும்…
இன்றளவும் வைத்திருக்கிறேன்…
பத்திரமாய்…
முதல் பரிசு…
வாசனைதிரவிய குப்பி…
காலியான பிறகும்…
முதல் காசு
ரெண்டு வெள்ளி நோட்டு…
தொட பயம், கிழிந்துவிடுமோ என்று…
முதல் புடவை
சாயம் போன பிறகும்….
தினமும் கட்டி ரசிக்கிறேன்…
முதல் கடிதமும், கவிதையும்
தொடபயம், தங்கள்…
எழுத்துக்களுக்கு வலிக்குமோ என்று…
முதல் கைகடிகாரம்
ஓடாவிட்டாலும்…
தினமும் கட்டிப்பார்க்கிறேன்…
என் நினைவில் இன்றளவும் நிற்கிறது…
கொடுத்த…
முதல் முத்தம் …
முதல் ஸ்பரிசம் …
என் வாழ்க்கையின்…
சொத்தாய் நான் நினைத்த…
முதல் நகையை (தாலி) மட்டும்…
ஏன் பறித்தீர்கள்?…ஏன்…? ஏன்…?
விடை தெரியாமல்…
தவிக்கிறேன்…
இன்றும்…
நீங்களே கேட்டீர்கள் என்று கூறியதால்…
களைந்து கொடுத்தேன் …
அத்துடன் என் உயிரையும்…
அது…. இப்போது…
இருக்காது உங்களிடத்தில்…
இருந்தால் காதில் வைத்துக் கேளுங்களேன்…
என் விசும்பலுடன்…
இதயத்துடிப்பும் கேட்கும்…
இதைத்தாங்கள் படிக்கும் போது…
நான் உயிரோடு இருந்தால் …
“
எழுத்துக்களுக்கு வலிக்குமோ படிக்கும்போது வலித்தது. அருமை.
உங்கள் கவிதை அருமை. தொடர்ந்து எலுதுங்கள்
றெஅல்ல்ய் சுபெர்ப்