என்னப்பா, எல்லாரும் எப்படி இருக்கீங்க? போன முறை ஒலி வடிவில இருந்த எபிசோட் பிடிச்சதா? கேள்விகள் கேட்க ஆரம்பிச்சிட்டீங்களா? என்னென்ன அற்புதங்கள் செய்திருக்கீங்க?
வாழ்க்கை எப்படி இருக்கு? அதுவா நடக்குதா அல்லது நீங்க உங்களுக்குப் பிடிச்ச மாதிரி செதுக்கறீங்களா?
அதுவா நடக்குதுன்னா அந்த அனுபவம் எப்படி இருக்கு? நம்மோட வாழ்க்கையை நாம உருவாக்க முடியும்கற சாத்தியத்துக்கு கதவைத் திறந்து வச்சிருக்கீங்களா? இல்லை, இப்போ வைக்கத் தயாரா?
எத்தனை பேர் வேற ஒருத்தருக்குத்தான் உங்க வாழ்க்கையை சரி செய்யற ஆற்றல் இருக்குன்னு நம்பறீங்க? ஒரு வேளை அது உங்களுக்கே இருந்ததுன்னா? ஒருவேளை நீங்க மட்டும்தான் உங்க வாழ்க்கைல ஒரு நிரந்தரமான மாற்றத்தை ஏற்படுத்தமுடியும்னா?
என்னோட ஒரு எம்டிவிஎஸ்எஸ் வகுப்புக்கு வந்திருந்த ஒரு பெண்ணுக்கு முன்னே பின்னே மாற்று சிகிச்சை முறைகள் பற்றி பெரிசா தெரியாது. அதனால எப்படி கத்துக்கப் போறோமோங்கற சந்தேகத்தில இருந்தாங்க. ஆனா சிகிச்சையை அவங்க பண்ண ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலேயே அவங்களால ஆற்றல் ஓட்டத்தை அவதானிக்க முடிஞ்சது. அவங்களுக்கே அது அதிசயமா தெரிஞ்சது. ஏன் நீங்களும் உங்களது ஆற்றலைக் கொஞ்சம் நம்ப ஆரம்பிக்கக் கூடாது?
நம்மள்ல எத்தனை பேர் உடல்தான் நாம்ன்னு நம்பறோம்? மரணிக்கும்போது நீங்க இறக்கறீங்களா உடல் இறக்குதா? அறிவு பூர்வமான பதிலை நான் கேட்கலை. உங்கள் அறிதல் என்ன சொல்லுது? உடல் உங்களுக்குள்ள இருக்கா? நீங்க உடலுக்குள்ள இருக்கீங்களா? (குழப்பறீங்களேன்னு நீங்க கதறுவது கேக்குது… ஒரு வேளை இது நாரதர் கலகம் போல நலம் கொண்டுவந்தா?) இதுக்கெல்லாம் பதில் கண்டுபிடிக்கணும்னு அவசியமில்லை. ஆனா கேள்விகள் கேட்டாலே தெளிவு பிறக்கும். இது போல நான் கேக்கற குண்டக்க மண்டக்க கேள்விகளுக்கு முகநூல்ல நல்ல வரவேற்பிருக்கு. நட்புக்கரம் பற்ற விரும்பினா:
https://www.facebook.com/nila.raj.5
இப்போ உடல் – ஆவி பற்றிய தெளிவு இருக்கோ இல்லையோ, உங்க உடம்பை நீங்க எவ்வளவு தூரம் கௌரவிக்கறீங்கங்கன்னு கொஞ்சம் பார்க்கலாம்… என்றைக்காவது உடலுக்கு நன்றி சொல்லிருக்கீங்களா? அதுக்கு என்ன வேணும்னு கேட்ருக்கீங்களா? (திருதிருன்னு முழிக்கறீங்கதானே?)
பொதுவா ஆசிய சமூகத்தில உடலை ஒரு விரும்பத்தகாத அம்சமாதான் கருதறோம். உடலை ஒரு பாரமாதான் நினைக்கறோம். நம்மோட கண்ணோட்டங்கள் நம்ம வாழ்க்கையை உருவாக்கறது உண்மையானா, உடலைப் பற்றிய நம்ம கண்ணோட்டங்கள் நமக்கு எப்படிப்பட்ட உடல்நலத்தைத் தரும்னு கொஞ்சம் நாம யோசிக்கலாம்.
உங்கள் உடலைப் பற்றி நீங்க என்னென்ன கண்ணோட்டங்கள் வச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கறதுக்கு சில கேள்விகள் கேட்டுப் பார்க்கலாம்:
உங்கள் உடல் உங்களுக்கு சுகமா, சுமையா?
உங்கள் உடலை நீங்க நேசிக்கறீங்களா? அது மேல என்னென்ன மதிப்பீடுகள் வச்சிருக்கீங்க? நிறை குறைகள் என்னன்னு நினைக்கிறீங்க?
உங்கள் உடலுக்கு என்ன வேணும்னு உங்களுக்குத் தெரியுமா? தெரிஞ்சுக்க முடியும்னு நினைக்கறீங்களா?
உங்க உடல்ல இருக்க உங்களுக்கு விருப்பமா?
கேட்டீங்களா? என்ன தெரிஞ்சுக்கிட்டீங்க?
உதாரணத்துக்கு உங்க உடம்பு குண்டா இருக்கறதுனால அவலட்சணமா இருக்கறதா ஒரு மதிப்பீடு வச்சிருந்தீங்கன்னு வச்சுப்போம். வேற என்ன சாத்தியத்தை உடல் உருவாக்கும்னு நினைக்கறீங்க?
‘குண்டா இருந்தா அவலட்சணம்தானே?’ன்னு கேக்கறீங்களா? எடுத்துக் காட்டுங்க எங்கே, எப்படி, யாரால இது உண்மையாக்கப்பட்டதுன்னு? இது ஒரு சுவாரஸ்யமான கண்ணோட்டம். அவ்வளவுதான். அதே சமயம் உடல் இளைக்கணும்னு விரும்பறது தப்பில்லை – அதனை நாம் தெரிவு செய்யும் பட்சத்தில்.
அதாவது உடல் இளைக்கறதை எப்போ நாம ஒரு தேவையா ஆக்கிடறோமோ, அப்போ அங்கே ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்திடறோம். நிர்பந்தம் கனமா இருக்கும். அந்த அதிர்வுலருந்து நாம செயல்படுத்தற எல்லாமே மேலும் இறுக்கத்தைத்தான் தரும்.
அதுக்கு பதிலா உடல் இளைக்கறதை ஒரு தெரிவா நாம விரும்பி செய்யும்போது அது இலகுவா இருக்கு. கடந்த ஒரு வாரமா நான் எம்டிவிஎஸ்எஸ் உடபட சில உடல் செயல்முறைகளை டிவி பார்க்கும்போது என்மேலே செயல்படுத்திக்கிட்டிருக்கேன். உடல் ரொம்ப ரிலாக்ஸ்டா லைட்டா இருக்கு. சின்னப் பிள்ளையா உணர்றேன்… இதைவிட எப்படி சிறப்பா அமையும்?
இந்த வாரம் உடலைப்பற்றியும் உங்களைப்பற்றியும் நீங்க வச்சிருக்கற கண்ணோட்டங்களைக் கரைக்கறதுக்காக ஒரு மணி நேர வகுப்பு இருக்கு. தலைப்பு ‘பேரழகான நீங்கள்’… உங்களோட பேரழகை வெளிக்கொணர ஒரு மணி நேரம் செலவு செய்வீங்களா?
http://www.infinitehealing.co.uk/events/
ஆக்ஸஸ் பார்ஸ் வகுப்புகள் இப்போ தமிழ்ல சென்னையில ரிஷி எடுக்கறார். நான் ஜூலை 6ம் தேதி பாரிஸ்ல தமிழ் பார்ஸ் வகுப்பு எடுக்கறேன். இதைவிட எப்படி சிறக்கும்? ஐரோப்பியத் தமிழர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. தெரிஞ்சவங்க யாருக்காவது விருப்பமிருந்தா தெரிவியுங்க.
ஆக்ஸஸ் கான்ஸியஸ்னஸ் பார்ஸ் பற்றி மேலும் விபரங்கள் தெரியவும் உத்திகள் சிலவற்றை இலவசமா இணையம் வழியா கற்றுக்கவும் விருப்பமிருந்தா எங்களுக்கு மின்னஞ்சலனுப்புங்க… அல்லது முகநூல் குழுமம் வழியா தொடர்பு கொள்ளுங்க:
https://www.facebook.com/groups/210462155759047/
ரொம்ப நாள் கழிச்சு விஸ்வரூபம் பார்த்தேன்… என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணினதா சொல்ல முடியாது. கமல் போட்ட முதலை எடுத்திருந்தா சரிதான்! ‘தீயா வேலை செய்யணும் குமாரு ..’ (என்ன பேருங்க இது?) ரொம்ப ஜாலியா இருக்கறதா கேள்விப்படறேன். பார்த்தீங்களா? எப்படி இருக்கு?
புதுசா ட்விட்டர்ல கணக்கு ஆரம்பிச்சிருக்கேன்: https://twitter.com/NilaNimi
கேள்விகளா வாழலாமே!
அபரிமிதமான அன்புடன்,
நிலா
“