முடிவிலா சாத்தியங்கள் (6)

என்னப்பா, எல்லாரும் எப்படி இருக்கீங்க? எத்தனையோ வாரங்களாச்சில்ல சந்திச்சு? உங்கள்ல சிலரை இந்தியா வரும் போது நேர்ல சந்திக்கற வாய்ப்பு கிடைச்சதுல பெரிய மகிழ்ச்சி.

இந்தியப் பயணம் கற்பனைக்கு அப்பாற்பட்ட விதத்தில ஒரு பெரிய விரிவாக்கமா அமைஞ்சிருந்தது. ஆரம்பத்தில வார இறுதில மட்டும் பார்ஸ் வகுப்புகள் செய்யறதாதான் திட்டம். ஆனா இருந்த ஒரு மாததில 2-3 நாட்கள் தவிர்த்து மற்ற எல்லா நாட்கள்லயும் ஏதாவது ஒரு வகுப்போ அல்லது பட்டறையோ அல்லது தனி அமர்வுகளோ இருந்துக்கிட்டே இருந்தது.

ஒரே மூச்சில ‘மடை திறந்து’ முழுசும் படிச்ச ஜெயகுமார், என்னோட எல்லா வகுப்புகளுக்கும் வந்திருந்தார். சுவாரஸ்யமான வாசகர்! அமர் சேவா சங்கம் ஊழியர்களுக்கும் புளியங்குடிலர்ந்து வந்திருந்த 8பேருக்கும் சேர்ந்து நடத்திய பார்ஸ் வகுப்பு ரொம்ப திருப்தியைத் தந்தது. சேவாலயாவில 500 ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆக்ஸஸ் உத்திகளைக் கற்றுக் கொடுக்க முடிஞ்சது மறக்க முடியாதது. இவை தவிர, நிறைய புதுப் புது அனுபவங்கள். அருமை! அருமை! இதைவிட எப்படி சிறப்பாக அமையும்?

ரெண்டு தொலைக்காட்சி நேர்முகங்களும் பண்ணினேன். கலைஞர் தொலைக்காட்சி நேர்முகம் இங்கே இருக்கு:

http://www.youtube.com/watch?v=5HeFx9xoRP0

ஆக்ஸஸ் பற்றியும் எனது அனுபவங்களைப் பற்றியும் இந்த நேர்முகத்திலர்ந்து நிறையவே தெரிஞ்சிட்டிருப்பீங்க.

போன வாரம் 3 நாட்கள் ஆக்ஸஸ் உடல் வழிமுறைகள் வகுப்பில கலந்துக்கிட்டு 50 செயல்முறைகள் கத்துக்கிட்டேன். நமது உடல் நோய்களையும் உபாதைகளையும் உருவாக்கற காரணிகளை நீக்க உதவற இந்த வழிமுறைகள் மூலமா பல அற்புதங்கள் நடந்திருக்கு. உதாரணமா எம்டிவிஎஸ்எஸ் என்கிற வழிமுறை மிகவும் சக்தி வாய்ந்தது. எல்லாவிதமான சூழல்களிலேயும் இது பயன்படுது. இதைப் பற்றி வெறொரு சமயம் இன்னும் விரிவா எழுதறேன். ஆற்றல் சிகிச்சை மூலமாகவே முகப்பொலிவு ஏற்படுத்தவும், கண்பார்வைக் கோளாறுகளைச் சரிசெய்யவும் கூட வழிமுறைகள் இருக்கு.

ஆக்ஸஸ்ல எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் என்னன்னா – உங்களுக்குத் தெரியும்கறதை உங்களுக்கு எடுத்துக் காட்டறதுதான் அதனோட நோக்கம். நம்ம வாழ்க்கையை நாமே உருவாக்கிக்கற சுய அதிகாரத்தைத் தரும் உத்திகளை, அதுவும் மிகவும் எளிதாக நடைமுறைப்படுத்தக் கூடிய உத்திகளை ஆக்ஸ்ஸ் கொண்டிருக்கறதாலதான் ரொம்ப வேகமா பரவிக்கிட்டு வருதுன்னு நினைக்கிறேன்.

என்னோட சில வகுப்புகள்ல கலந்துக்கிட்ட டாக்டர் ஒருத்தர், "இத்தனை நாளா கண்டதையும் சுமந்துக்கிட்டு வாழ்க்கையை இறுக்கமாக்கிட்டோம்னு தெரிஞ்சிக்கிட்டேன், அதைல்லாம் மடமடன்னு சரிஞ்சு ஒரு சுதந்தர உணர்வு வந்திருக்கு"ன்னு சொன்னாங்க.

குழந்தைகளுக்கு ஆக்ஸஸ் மிகப் பெரிய விதத்தில உதவியா இருக்கு. ஏன்னா அவங்களுக்கு நம்மை விட மதிப்பீடுகளும் கண்ணோட்டங்களும் மிகவும் குறைவு. நல்ல திறந்த மனப்பான்மை இருக்கறதுனால ரொம்ப சீக்கிரமே மிகச் சிறந்த பலன்களை அடையறாங்க.

ரெனிஷாவுக்கு 13 வயசு ஆகுது. டிசம்பர்ல அவளோட அம்மாவோட பார்ஸ் வகுப்புக்கு வந்த போது அவளுக்கு விருப்பமே இல்லை. ஆனா வகுப்பு முடிஞ்சப்பறம் அநேகமா எல்லா நாட்களுமே அவளோட அம்மாவுக்கு பார்ஸ் செஞ்சுவிட்டிருக்கா. நான் ஏப்ரல்ல அவளைச் சந்திச்சப்போ அவகிட்ட ஏற்பட்டிருந்த மாற்றங்கள்னால அசந்து போயிட்டேன். படிப்பில மிக நல்ல முன்னேற்றம். ரொம்பப் பக்குவப்பட்ட, பொறுப்புள்ள பெண்ணா மாறி இருந்தா. தவிர, தான் விரும்பறதெல்லாம் தனக்குக் கிடைக்கறதாகவும் எனக்கு சில உதாரணங்கள் சொன்னா. அசந்து போயிட்டேன். "அப்போ உனக்குத் தேர்வுல வரப்போற கேள்விகள்லாம் முன்னாலே தெரிஞ்சா நல்லா இருக்குமே"ன்னு சிரிச்சுக்கிட்டே கேட்டேன்.

"எனக்குப் படிக்கும்போதே எந்தக் கேள்வி வரப்போகுதுன்னு இப்போ தெரிய ஆரம்பிச்சிருச்சு"ன்னு சொனா… வாஹூ…. இதைவிட சிறப்பாக எப்படி அமையும்?

இவ்வளவுக்கும் ரெனிஷாவுக்கு யாரும் பார்ஸ் செஞ்சுவிடலை. அவதான் எல்லாருக்கும் பண்ணி விட்டிருக்கா. பார்ஸ் பண்ணிவிடறவங்களுக்கும் ரிசீவ் பண்றவங்களுக்குக் கிடைக்கிற நன்மைகள் கிடைக்குதுங்கறதுக்கு இது ஒரு உதாரணம்!

இன்னொரு குட்டிப் பையனும் கொஞ்சம் கூட விருப்பமில்லாமல்தான் வகுப்புக்கு வந்தான். கூட வந்த அவன் பெற்றோருக்குக் கூட இந்த மாதிரி வகுப்புகளுக்கெல்லாம் பணத்தை விரயம் செய்ய வேண்டாம்னு அறிவுரை செய்திருக்கான். ஆனா வகுப்பு முடிஞ்சதும் ஆளே மாறியாச்சு… அடுத்த நாள் நடந்த வகுப்புக்கும் வந்து எனக்கு பார்ஸ் பண்ணி விட்டான். இப்போ ரெண்டு நாட்களுக்கு முன்னால ‘நான் முன்னே இருந்ததைவிட இப்போ ஃப்ரீயா இருக்கேன்’ன்னு எனக்கு செய்தி அனுப்பிச்சிருந்தான். குழந்தைகள்கூட வேலை செய்யறது எவ்வளவு சுவாரஸ்யம்!

கபிலன்கற இன்னொரு பையன் நான் நடத்தின அறிமுக வகுப்புக்கு வந்து அதுல சொல்லிக் கொடுத்த உத்திகளைப் பயன்படுத்தி உடனே பலன் கிடைச்சதுனால அடுத்த நாள் அவங்க அம்மாவையும் வறுபுறுத்தி வகுப்புக்கு அழைச்சிட்டு வந்தான்… அவனோட அறிதல் என்னை ரொம்பவும் ஆச்சர்யப்பட வைச்சது! எனக்கு மிகவும் பிரியமான ஒரு மாணவன் கபிலன். (என்னோட முதல் சிறுகதையின் முக்கிய கதாபாத்திரத்தின் பெயரும் கபிலன்தான்!)

கடந்த ரெண்டு வாரங்களா நிறைய ஒரு மணி நேரப் பட்டறைகளை இணையம் வழியா நடத்திட்டு வர்றேன். என்னோட 4 வகுப்புகள்ல ரோஸ் என்கிற 5 வயதுப் பெண்ணும் வினீத் என்கிற 9 வயதுப் பையனும் அவங்க அம்மாவோட கலந்துக்கிட்டாங்க! அவங்களோட விழிப்புணர்வினால என்னை ஒரேடியா அசர வச்சிட்டாங்க! எத்தனை அருமையான கேள்விகள்! எவ்வளவு சடுதியா சொல்ல வர்றதைப் புரிஞ்சிக்கிட்டு நடைமுறை வாழ்க்கையோட அவற்றைத் தொடர்பு படுத்திப் பார்க்கறாங்க! அப்பப்பா… வகுப்பையே இந்தக் குழந்தைங்க அழகாக்கறாங்க. எனக்குப் பெரிய உத்வேகத்தைத் தரும் குழந்தைகோட இன்னும் அதிகமா வேலை செய்யறது எப்படி அமையும்?

சென்னையில என்னோட முதல் பட்டறை ‘Empowered Babies’. எனக்கு ரொம்பவும் பிடிச்ச தலைப்பு. ரெண்டு தந்தையர் மட்டுமே வகுப்புக்கு வந்திருந்தாங்க. அதில ஒருத்தர் தனது மனைவிகிட்டே அதில சொல்லிக் கொடுத்த உத்திகளைப் பகிர்ந்துகிட்டிருக்கார். பிறந்து சில நாட்களே ஆனா அவங்க குழந்தைகிட்டே இந்த உத்திகளைப் பயன்படுத்திப் பார்த்துட்டு அவங்க குழந்தை அவங்களைப் புரிஞ்சிக்கறதையும், தனக்கு என்ன வேணும்ங்கறதை அழகா கம்யூனிகேட் பண்றதையும் ரொம்ப மகிழ்ச்சியா பகிர்ந்துக்கிட்டாங்க. சமத்து…. வேறேன்ன சாத்தியம்?

**********

இந்த வகுப்புக்கு நாங்க கொடுத்திருந்த விளம்பர வாசகங்களைக் கீழே தர்றேன்… இந்த வகுப்பில விருப்பமிருந்தா, எனக்குத் தெரிவியுங்க:

உங்கள் குழந்தைக்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது? வார்த்தைகளற்ற பெருவெளியில் தனது தேவைகளைச் செவ்வனே பெற்றுக் கொள்கிறதா உங்கள் குழந்தை? அந்தச் சாமர்த்தியத்தில் உங்கள் உயிர்ப்பு கூடுகிறதா, குறைகிறதா? வாழ்க்கைச் சூழலைத் தலைகீழாய்ப் புரட்டிப் போட்ட குழந்தையின் மேல் கோபம் வருகிறதா? அல்லது ஆகச் சிறந்த பெற்றோராக இல்லையே என்ற ஆற்றாமை ஏற்படுகிறதா? சரியாய்க் குழந்தையைப் பராமரிக்கிறோமா என்ற சந்தேகம் தோன்றியதுண்டா? சற்றே சற்று உங்களுக்கே உங்களுக்கான இடைவெளி தேவை என்று தோன்றி அதற்காக உங்களைக் கடிந்து கொண்டதுண்டா? வேலையைவிட பிள்ளையிடம் அதிக நேரம் செலவிட ஏக்கம் ஏற்படுகிறதா? உங்கள் பச்சிளங்குழந்தை உங்களை இன்னும் கொஞ்சம் புரிந்து கொண்டால் எப்படி இருக்கும் என யோசித்திருக்கிறீர்களா? குழந்தை வளர்ப்பு அயர்ச்சி ஏற்படுத்துகிறதா?

உங்கள் குழந்தை வயிற்றிலிருக்கும் போதே உங்களைப் புரிந்து கொள்ள் ஆரம்பிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? எனில், பச்சிளங்குழந்தைக்கு உங்கள் பரிமாற்றம் புரியாமலிருக்குமா? உங்கள் குழந்தையும் நீங்களும் ஒருவரையொருவர் முற்றிலுமாய்ப் புரிந்துகொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? குழந்தை வளர்ப்பு ஒரு சுமையாக இல்லாமல் இன்சுவையாக இருந்தால் எப்படி இருக்கும்? உங்கள் குழந்தையும் நீங்களும் தத்தம் தேவையை எளிதாய்ப் பூர்த்தி செய்து கொள்ள முடிந்தால்? அந்த வளர் அனுபமே உங்கள் குழந்தையின் வளமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்தால்?

வெறும் ஒரு மணி நேரத்தில் இவற்றை சாத்தியப்படுத்துவதற்கான உத்திகள் உங்களுக்குக் கிடைத்தால்? ஆக்ஸஸ் கான்ஸியஸ்னஸ் நமது வாழ்க்கையின் நிர்பந்தங்களையும், குறைகளையும் களையத் தக்க, பல எளிய, ஆற்றல் வாய்ந்த உத்திகளைத் தன்னிடம் கொண்டிருக்கிறது. அவற்றில் சிலவற்றைப் பெற்றோருக்குக் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன்’

**********

வாழ்க்கையைக் கவலையுடனும் குழப்பத்துடனும் தொடர விருப்பமிருபவர்கள் தயவு செய்து கீழ்க்கண்ட சுட்டியில் தங்கள் வரவினைப் பதிவு செய்யாதீர்கள்:

http://www.infinitehealing.co.uk/contact-us/

இதைப் போல பல தலைப்புகள்ல ஒரு மணி நேரப்பட்டறைகள் நடத்திட்டு வர்றேன். உங்க வீட்டில இருந்துக்கிட்டே இந்த நிகச்சிகள்ல இணையம் வழியா கலந்துக்கிட்டு என்கிட்டே பேசலாம். இதுவரை நடத்திய, வரப்போற பட்டறைகளப் பற்றி இங்கே தெரிஞ்சிக்கலாம்:

http://www.infinitehealing.co.uk/events/

தமிழ்ல ஒரு இணைய வானொலி நிகழ்ச்சியும் நடத்தப் போறோம். இதுல கலந்துக்கிட்டு என்கிட்டே கேள்வி கேட்க விரும்பினாலும் தொடர்பு கொள்ளுங்க:

http://www.infinitehealing.co.uk/contact-us/

இன்னும் எழுத நிறையவே இருக்கு. சீக்கிரமே மீண்டும் சந்திக்கலாம். அதுவரைக்கும் கேள்வியாகவே வாழறீங்களா? உங்களுக்கு வேறென்ன பங்களிப்பாக நானிருக்கலாம்?

அபரிமிதனான அன்புடன்,
நிலா

About The Author

1 Comment

  1. maithreyi Nath

    Dear Nila,

    I had been following your TV interviews on Access Consciousness. I am getting a land-phone line very soon and thereafter can communicate through skype. I am very much interested in following these classes through skype. Please keep me informed.

    Kind regards, Maithreyi (from Sydney)

Comments are closed.