முடிவிலா சாத்தியங்கள் (3)

என்னப்பா, அனைவரும் நலமா? போனவாரம் வகுப்புகள்ல இருந்ததனால எழுத முடியலை. உங்களுக்கு வாழ்க்கை எப்படிப் போகுது?

இந்த வாரம் என்னோட தமிழகப் பயணத்திட்டம் குறித்த வேலைகள்ல ஈடுபட்டிருக்கும்போது சில சுவாரஸ்யமான நபர்களோட பேச வாய்ப்பு கிடைச்சது. அவங்கள்ல முக்கியமானவர் குருசாமி. என்னோட ஜெயா டிவி நேர்முகம் பார்த்துட்டு ஆக்ஸஸ் வகுப்புல கலந்துக்கணும்னு மிகுந்த ஆசை அவருக்கு. ஆனா ரூ7500/-ங்கறது அவரைப் பொறுத்தவரை பெரிய தொகை. அவர்கிட்டே நான் பேசினபோது, பெரிய பெரிய படிப்புப் படிச்சவங்க புரிஞ்சிக்க சிரமப்படற விஷயங்களை அத்தனை சுலபமா புரிஞ்சிக்கிட்டார். நானும் அவரும் வார்த்தைகளால பேசறதைவிட ஆற்றல் மூலமா பேசிக்கிட்ட மாதிரிதானிருந்தது. அவர்கிட்டே எதையும் நான் விளக்கமா சொல்லத் தேவையில்லாத மாதிரி இருந்தது. வகுப்புக்கு வர்றாரோ இல்லையோ என்னைக் கண்டிப்பா வந்து சந்திக்கச் சொல்லி அவர்கிட்டே சொன்னேன். அவர் கண்டிப்பா வகுப்புக்கே வர்றேன்னு சொல்லிருக்கார். அவரைச் சந்திக்க நான் ஆவலா இருக்கேன்.

ஒரு கேள்வி: நீங்க உடலுக்குள்ளே இருக்கீங்களா? அல்லது உங்க உடல் உங்களுக்குள்ளே இருக்கா?

பதில் சொல்வீங்களா? தமிழ்ல படிக்கிற பழக்கம் ரொம்பக் குறைஞ்சிட்டதனால நாம எழுதறது பயன்படுதாங்கறது கேள்விக்குறியாவே இருக்கு. இது நல்லதா கெட்டதாப்பா? தொடர்ந்து தமிழ்ல எழுதறதா வேண்டாமா? 

சரி… மடை திறந்து படிச்சிருந்தீங்கன்னா ‘நான் யார்?’ என்கிற கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேக்கற ஒரு பயிற்சியைப் பற்றித் தெரிஞ்சு வைச்சிருப்பீங்க… இல்லைன்னா, போய் படிச்சிட்டு வாங்க  (நல்ல விளம்பரம்!!!)

அது தொடர்பான ஒரு கேள்வி: நீங்க நீங்களா வாழறீங்களா?

நாளைக்குக் காலைல எழுந்திருக்கும்போது இந்த உலகத்தில உங்களைத் தவிர யாருமே இல்லைன்னா என்ன செய்வீங்க? ‘அழுவேன்’ அப்படின்னு சீரியல் போடறதைத் தவிர்த்துட்டு யோசிச்சுப் பாருங்க… என்ன செய்வீங்க? எப்படி இருக்கணும்னு நினைப்பீங்க? அந்த நீங்களா நீங்க இப்போ வாழறீங்களா? அந்த நீங்கதான் நீங்க இந்த உலகத்துக்குக் கொடுக்கற மிகப் பெரிய பரிசுன்னு சொல்றார் டெய்ன் ஹியர். அவர் வகுப்புக்குத்தான் நான் போகப் போறேன் இந்த வாரம்.

அவர் எழுதிய ‘Being you Changing the World’ என்கிற புத்தகத்தைப் படிச்சு ஆனந்தக் கண்ணீர் வடிச்சிருக்கேன்… ‘உங்ககிட்டே இருக்கற குறைகளே ஏன் உங்களோட உன்னதமான கொடைகளா இருக்கக் கூடாது?’ன்னு கேக்கறார் இவர். இதைப் புரிஞ்சுக்கறது கொஞ்சம் கஷ்டம்தான். இன்னொரு முறை இதைப் பற்றி விரிவா எழுதறேன்.

அந்தப் புத்தகம் படிக்கும்போது கண்டிப்பா நம்மகிட்டே குறையேதுமில்லை, நாமே உலகத்துக்கு ஒரு கொடைதான்னு தோண ஆரம்பிச்சிடும். ரொம்ப நல்ல புத்தகம். முடிஞ்சா வாங்கிப் படிச்சுப் பாருங்க.

நாம நாமா இல்லாம இருக்கறதுக்கு நாம சொல்ற முக்கிய காரணம், ‘இந்த உலகம் ஏத்துக்காது’. இப்படியே ஒவ்வொருத்தரும் சொல்லிச் சொல்லியே நம்மைக் குறுக்கிக்கறோமோ? போன பாதையிலேயே எல்லாரும் போனா புதிய பாதைகள் போடறதெப்படி?

யாராவது நம்மைக் குறை சொல்லும்போது, "நன்றி"ன்னு சொற பக்குவம் நமக்கு வந்தா, புதிய பாதைகள் பிறக்குமோ? இந்த உலகம்ங்கறது நாமளும் சேர்ந்ததுதான்னு நாம மறந்திடறோமோ?

உணமையைச் சொல்லணும்னா நான் ஒரு சுகவரா ஜெயா டிவில வெளிப்பட்டது எனக்கு அசௌகர்யமாத்தானிருந்தது. என் குடும்பத்தார், நண்பர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பாங்களோன்னு சின்ன பயம் இருந்தது. அதை உணர்ந்து ஆக்ஸஸ் மூலமா அதை நீக்கிட்டுத்தான் என்னால அந்த நேர்முகம் பற்றி வெளில சொல்ல முடிஞ்சது. இன்னிக்கு இத்தனை பேருக்கு ஆக்ஸஸ் கான்ஸியஸ்னஸ் பற்றித் தெரிஞ்சிருக்குன்னா அந்த நேர்முகம் ஒரு முக்கியக் காரணம்ங்கறது உண்மைதான். நான் நானா வெளிப்படறதுக்குத் தயங்கிருந்தேன்னா, இத்தனை பேர் பயன்பெற முடியுமா? நான் 2006ல நிலாச்சாரல் பற்றி செய்த நேர்முகத்தில இதைவிட நல்லா பேசின மாதிரி இருந்தது எனக்கு. ஆனா அந்த ‘நிலா’வை விட இந்த ‘நிலா’ இன்னும் ஆதென்டிக். அதாவது இந்த நிலா தனக்கு உண்மையானவள். அதனாலதான் இந்த நேர்முகம் இன்னும் அதிகப் பேரைப் போய் சேர்ந்திருக்கு. உங்களுக்கு நீங்க உண்மையா இருக்க என்ன செய்யணும்? ஒருவேளை அப்படி இருந்தா நீங்க இன்னும் மகிழ்ச்சியா இருப்பீங்களோ?

ஒரே நாள்ல விஸ்வரூபம் எடுக்கணும்னு நான் சொல்லலை. அதுதான் உங்க விருப்பம்னா ரொம்ப ரொம்ப சந்தோஷம். இல்லாத பட்சத்தில சின்னச் சின்ன விஷயங்கள்ல நீங்களா இருக்கப் பாருங்களேன். அதுல கிடைக்கிற சந்தோஷம் இன்னுமின்னும் உங்களை விரிவடையச் செய்யும்னு நீங்களே உணர்வீங்க. செய்வீங்களா?

அடுத்த முறை உங்களை நீங்க கடிஞ்சிக்கும்போது ‘ஒரு வேளை இதுல தப்பேதும் இல்லாம இருந்தா?’ங்கற கேள்வியைக் கேட்டுப்பாருங்க. ‘3 கார், 4 பங்களா, 2 குழந்தைகள்… இத்யாதி இத்யாதி’ இதுதான் வாழ்க்கைன்னு இருக்கற நியதிகள் உங்களை நீங்களா வாழவிடுதான்னு கேட்டுப் பாருங்க. இந்த இத்யாதிகளில் உங்களைத் தொலைச்சுட்டு வாழ்றதில அர்த்தமிருக்கான்னு கேட்டுப் பாருங்க.

‘ஒரு வேளை, குடும்பத்தோட நேரம் செலவிடணும்கறதுக்காக ஆஃபீஸ் ப்ரமோஷனை மிஸ் பண்றதுல தவறேதுமில்லாம இருந்தா?’ போன்ற கேள்விகளைக் கேட்டுத்தான் பாருங்களேன். ‘கெரியரைக் கெடுத்துக்கறேன்’னு பத்துப் பேர் இடிச்சுச் சொன்னாலும் நீங்க ஒரு புதிய சுமூகத்துக்கான வரைபடம் போடறீங்கங்கற உணர்தல் உங்ககிட்டே இருந்தா அவங்ககிட்டே ‘நன்றி’ன்னு சொல்லத் தோணாதா? உங்களைப் பார்த்து இன்னும் நாலு பேர் மாறினாங்கன்னா, அந்த வரைபடம் உண்மையாகிடாதா? ஹுஹு… அப்ப இன்னும் மகிழ்ச்சியான சமுதாயம் உருவாகிடாதா? வேறன்ன சாத்தியங்களிருக்கு? இந்த உலகத்துக்கு உங்களாலான பங்களிப்பு வேறென்ன?

‘நீங்க இந்தப் பிரபஞ்சத்துக்கு ஒரு பரிசு’ங்கறதை நினைவில வச்சுப்பீங்களா?

எந்தக் குழந்தையாவது தன்கிட்டே குறை இருக்கறதா நினைக்குமா? அப்போ குழந்தைகளோட கண்ணூடா உலகத்தைப் பார்க்கமுடிஞ்சா எவ்வளவு நல்லாருக்கும்?

இந்த வாரம் நிலாச்சாரல் குழுமத்துல பயங்கர அரட்டை. யஷ், ரிஷி, முத்துக்குமார், ப்ரவீண், மாமல்லன், சிவான்னு ஒரு நல்ல பட்டாளம். செம ஜாலி… நீங்களும் இணைஞ்சுக்கலாம்:

http://www.facebook.com/?ref=tn_tnmn#!/groups/210462155759047/

ரிஷி ராக்ஸ் எத்தனை பேருக்கு நினைவிருக்கு? சொல்லாம கொள்ளாம சட்டுன்னு நிறுத்தி அவரோட விசிறிகளையெல்லாம் நோகடிச்சாரே, ரிஷி… இந்த வாரம் குழுமத்தில ஃபுல் பார்ம்ல இருந்தார்… அவரை மிஸ் பண்றவங்க அங்கே அவரைப் பிடிக்கலாம்.

தமிழகம் போற வழில வளைகுடா நாடுகள்ல இறங்கறேன்… சந்திக்க யாராவது இருக்கீங்களா அங்கே?

விரைவில் பார்க்கற வரை, கேள்விகளாவே வாழுங்க…

அபரிமிதமான அன்புடன்,
நிலா.

About The Author

2 Comments

  1. g

    Hi,
    Saw your interviews in Jaya TV and in Deepam TV. Gist of what you have mentioned is dont be judgemental”, “take life as it comes and dont take anything too seriously and dont cling/attach on something and get suffered “. Then I heard you are a medium to talk to spirits and get messages from them and pass it onto requesters. My point is, assuming there are sprits ,there is a reason why they are not visible to our eyes, and also if you know what is going to happen in advance then there is no fun in life. I see some kind of contradiction between “dont take things seriously” vs seeking sprits help to benefit out of life. Can you explain your view points on this?”

Comments are closed.