முடிவிலா சாத்தியங்கள் (10)

என்னப்பா, எல்லாரும் நலம்தானே?

இங்கே இலண்டன்ல வெயில் பின்னுது… ஆனா அதுவும் சுகமே!

‘இந்த கணத்தில உங்களுக்கு ஏதாவது குறை இருக்கா?’ அப்படின்னு கேட்டா என்ன சொல்வீங்க? …….

பெரிய பட்டியலா நீங்க போட்டீங்கன்னா… திரும்ப கேள்வியைப் படிச்சிட்டு யோசிங்க… இந்த கணத்தில நமக்குத் தேவையான எல்லாமே இருக்கு, சரிதானே? நமக்குத் தேவையானது இல்லைன்னா நாம இருக்கவே மாட்டோமே… நமக்கு இல்லைன்னு அல்லது இருக்கறதா நினைக்கற எல்லாமே கடந்த அல்லது எதிர்காலத்க் குறிச்சுதானிருக்கு.

இந்த கணம் நமக்குத் தேவையான எல்லாத்தையும வச்சிருக்கு. அப்போ இந்த கணத்தில வாழப்பழகினா வாழ்க்கை எவ்வளவு நல்லா இருக்கும்? இது பயிற்சில சாத்தியமாகும்… எக்கார்ட் டோலே, நிகழ் கணத்தில வாழறதுக்கு மூச்சை பயன்படுத்தச் சொல்றார். பேருணர்வோட நாம எடுக்கற ஒரு மூச்சு நம்மை நிகழ்கணத்துக்குக் கொண்டு வந்துடும்கறார். இதுக்கு ஒரு ஒழுக்கத்துடன் கூடிய உறுதி வேணும்.

மதிப்பீடு இல்லாத நிலை மூலமா இந்த நிகழ்வாழ்வு நிலையை அடையலாம்னு சொல்லுது ஆக்ஸஸ் கான்ஸியஸ்னஸ். மதிப்பீடு செய்யறதுங்கறது எதையும் நல்லது, கெட்டது, சரி, தவறுன்னு பிரிச்சுப்பார்க்கறது. அப்படி இல்லாம எல்லாத்தையும் அப்படி அப்படியே பார்க்க முடிஞ்சா எப்படி இருக்கும்? நல்லது, கெட்டது, சரி, தவறுங்கறது நாம அடிக்கற வர்ணங்கள்தானே?
உதாரணத்துக்கு மழை நல்லதா கெட்டதான்னு கேட்டா பதில் இடத்துக்கு இடம் நேரத்துக்கு நேரம் மனிதருக்கு மனிதர் மாறுபடுமில்லையா?

இப்படி எந்த மதிப்பீடுகளுமில்லாத, இறுகிய கண்ணோட்டங்களற்ற நிலையை ஆக்ஸஸ் கான்ஸியஸ்னஸ் பார்ஸ் மூலம் எளிமையா அடையலாம். ஆகஸ்ட் மாதம் தமிழ்ல இந்த வகுப்புகளை எடுக்க நான் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு வரப்போறேன். இணைந்து கொள்ள விருப்பமிருந்தா தெரிவியுங்க:

http://www.infinitehealing.co.uk/contact-us/

பார்ஸ் வகுப்புக்கான கையேட்டினை முழுமையா தமிழ்ப் படுத்திட்டோம். பட்டி தொட்டியெல்லாம் இந்த எளிமையான முறை போயடையணும்கறது என்னோட விருப்பம். இது மூலமா நடந்திருக்கற அற்புதங்கள் என்னை ரொம்பவே வியப்படைய வச்சிருக்கு. நாம ஒவ்வொருத்தருமே அற்புதங்களை உருவாக்க முடியும்கறதை உணர முடியறது எவ்வளவு வலிமை தருது!

இங்கே ஆக்ஸஸ் உடல் செயல்முறைகள் பற்றியும் சொல்லியாகணும். நண்பரோட தந்தைக்கு அமரவே முடியாத அளவுக்கு புற்று நோய் தாக்கி இருந்தது. MTVSS உட்பட சில உடல் செயல்முறைகளை அவர் மேல செயல்படுத்த, ரெண்டே நாள்ல எழுந்து நடக்க ஆரம்பிச்சிட்டார் வேறெந்த சிகிச்சையுமில்லாமலே. தவிர, அதுக்குப் பிறகு நடந்த அறுவை சிகிச்சையும் ரொம்ப எளிதாக முடிந்ததோட, வெறும் மாத்திரையிலேயே குணப்படுத்திடலாம்கற அளவு நோயோட தீவிரம் குறைஞ்சிடுச்சு. இதைவிட சிறப்பாக எப்படி அமையும்? மாற்றுச் சிகிச்சை முறைகள்ல எந்த நம்பிக்கையுமில்லாம இருந்த அவர் இப்போ அவரே கேட்டு சிகிச்சை வாங்கிக்கறாராம்…

பார்ஸ் சிகிச்சைக்குப் பிறகு அவரோட மனநிலையிலேயும் மிக நல்ல மாற்றம். அவர்கிட்டேர்ந்த இறுக்கமான நம்பிக்கைகள், கண்ணோட்டங்களா இளகிவிட்டதை நண்பர் மகிழ்ச்சியோட பகிர்ந்துகொண்டார்.

ஆக்ஸஸ்ல எனக்குப் பிடிச்ச அம்சம் என்னன்னா ‘நாம் அறிவோம் என்பதை அறியத் தருதல்’. எதுவுமே வெளிலருந்து வர்றதில்லை – நாம நலம் பெறுதல் உட்பட. இந்த செயல்முறைகள் எல்லாமே நமக்குள்ள இருக்கற ஆற்றலை வெளிக்கொணர்றதுதான். அதனால இந்த செயல்முறைகளைப் பயன்படுத்தி சிகிச்சை தர எந்த முன் அனுபவமோ அல்லது விசேஷத் தகுதிகளோ/ திறன்களோ தேவையில்லை. ஏன்னா, செயல்முறைகளை உடல்ல செயல்படுத்தறவங்க செய்யறதெல்லாம் கையை உங்க உடல் மேல வச்சு குறிப்பிட்ட ஆற்றலைத் தூண்டி விடறதுதான். மீதி எல்லாமே நீங்களும் உங்கள் உடலும் செய்யற அற்புதங்கள்தான். குழந்தைகளும் ரொம்ப எளிதாகக் கற்றுக்கலாம்.

பாரிஸ்ல நடந்த எம்டிவிஎஸ்எஸ் வகுப்புல ஏழு வயசு வருண் எவ்வளவு அழகா சிகிச்சை அளிக்கறார் பாருங்க…

பார்ஸ் வகுப்புகளைத் தமிழ்ல எடுக்க ரிஷி தயாரா ஆயிட்டார். 50க்கும் மேற்பட்ட உடல் செயல்முறைகளையும், ஆக்ஸஸ் அடிப்படை மற்றும் முதல் நிலை வகுப்புகளை முழுமையா தமிழ்ல இப்போ நான் மட்டுமே எடுக்கறேன்… பாரிஸ் வகுப்புகளுக்கு சுவிட்சர்லாந்திலேர்ந்து அன்பர் ஒருவர் வந்திருந்தார். அப்போதான் எனக்குத் தமிழ் வகுப்புகளுக்கு இருக்கற மதிப்பு புரிஞ்சது… உங்களுக்கு இந்த வகுப்புகள் தமிழ்ல வேணும்னா என்னைத் தொடர்பு கொள்ளத் தயங்காதீங்க. தமிழ்ல வகுப்பு எடுக்கறது சந்தோஷமான விஷயம்…

இந்த வாரம் மன அழுத்தத்திலேர்து வெளிவந்து வாழ்க்கையை ஆனந்தமா அனுபவிக்க உதவற ஒரு உடல் செயல்முறை வகுப்பு இலண்டன்ல எடுக்கப் போறேன்… இதைச் சென்னையிலேயும் சிங்கப்பூர், மலேசியாலேயும் தமிழ்ல எடுக்க நான் தயார்… நீங்க தயாரா?

‘இந்தியா’ஸ் டான்ஸிங் சூப்பர் ஸ்டார்’ பார்க்கறீங்களா? லொயோலா ட்ரீம் டீம் கலக்கறாங்க, இல்லையா? ஓட்டு போட்டுப் பசங்களை ஊக்குவிக்கலாமே? இந்த நிகழ்ச்சியோட நடுவர்களெல்லாம் ரொம்ப ஸ்வீட்… தங்களோட கருத்தை போட்டியாளர்களுக்கு வலிக்காம பரிவோட அதே சமயம் ரொம்ப ஜனரஞ்சகமா சொல்றாங்க. நடிகர் ரிதேஷ் தேஷ்முக் தன்னுடைய குறும்புகள் மூலமா நிறைய விசிறிகளை சம்பாதிச்சிருப்பார்னு நினைக்கறேன்…. இந்திய நிகழ்ச்சிகள்ல நான் ரசிக்கற ஒரே நிகழ்ச்சின்னு சொல்லலாமோ?

முடிக்கறதுக்கு முன்னால உங்ககிட்டே சில கேள்விகள்:
உங்களுக்கு நீங்க நன்றியோட இருக்கறீங்களா?
உங்க கதை என்ன? அது உங்கள் வாழ்க்கையை வளமாக்க எப்படி உதவுது?
உங்களுக்கு நீங்க வச்சிருக்கற வரையறைகள் என்னென்ன?

அடுத்த முறை பார்க்கற வரை கேள்விகளா வாழறீங்களா?

எந்த ஆக்ஸஸ் வகுப்புகளுமே எடுக்காத ஒரு வாசகி, என்னோட வீடியோ பார்த்துட்டு ‘இறையோட தொடர்பில இருக்கறது எப்படி?’ங்கற கேள்வியைக் கேட்டிருக்காங்க. அடுத்த நாளே அவங்களுக்கு வந்த ஒரு செய்தி மடல்ல ‘இறையோட தொடர்பில இருக்கறதுக்கான வழி……’ அப்படின்னு பதில் கிடைச்சிருக்கு. அதுக்க அடுத்த நாளே இன்னும் விரிவான பதில் கிடைச்சிருக்கு அவங்க த்ரில் ஆயிட்டாங்க… இதைவிட எப்படி சிறக்கும்?

நீங்க என்னென்ன அற்புதங்களை உருவாக்கறீங்க?

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author