மின்சார இழப்பு:
வீட்டு உபயோகத்தில் இரண்டாவது அதிக மின்சார இழப்பு மின் கசிவால் ஏற்படுகிறது. பழைய ஒயரிங், பாதுகாப்பற்ற இன்சுலேஷன், கான்கீரிட் மற்றும் டைல்ஸ் தளங்கள் போன்றவை மின்சாரம் எளிதில் கசிய வழிவகுக்கும். ELCB(Earth Leakage Circuit breaker) எனப்படும் கருவியைப் பயன்படுத்தி வீட்டில் எங்கு மின்கசிவு உள்ளது என்பதை மின்னியல் பொறியாளரால் எளிதில் கண்டறிய முடியும்.
சுருங்கச் சொல்லுவதனால், தேவையில்லாத இடங்களில் மின்சாரச் செலவு, பழைய அழுக்கடைந்த நிறுத்தப்படாத விளக்குகள், பழைய குளிர்சாதனப் பெட்டி, ஆள் இல்லாமலே ஓடிக் கொண்டிருக்கும் மின்விசிறி, தொலைக்காட்சி போன்றவையே மின்சாரத் தட்டுப்பாட்டிற்கான மூலங்கள்.
உங்கள் வீட்டிலேயே உள்ள எனர்ஜி மீட்டர் மூலம் ஒரு நாளில் எப்போது அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என கண்டறிந்து அந்நேரப் பயன்பாட்டைக் குறைக்கலாம்.
மாற்றுவழிகள்:
மின்சாரம் பயன்படுத்தி செய்யப்படும் வேலைகளுக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துவதும் சிறந்த வழியே. அதாவது மின்சாரத்தால் தண்ணீரை சூடாக்குவதற்கு பதில் சோலார் முறையிலோ, கேஸ் மூலமாகவோ தண்ணீரை சூடாக்கலாம். கணினியில் நீங்கள் செலவழிக்கும் நேரத்தை குறைப்பதன் மூலமும், குளிர்காலங்களில், குளிரும் இரவுகளில் குளிர்சாதனப் பெட்டியை நிறுத்துவதன் மூலமும் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.
பொதுவான மின் சிக்கன முறைகள்:
- இசையை மட்டும் கேட்கும் போது ஸ்பீக்கரில் போட்டு பக்கத்து வீட்டுக்காரரை வம்பிழுக்காமல் ஸ்டீரியோவில் (stereo) கேளுங்கள்.
- வீட்டிலுள்ள டிவி, ரேடியோ, பிரிண்டர், ஸ்கேனர், ஸ்பீக்கர் போன்றவற்றை stand by mode- ல் வைக்காமல் முழுவதுமாய் மின்னிணைப்பைத் துண்டியுங்கள்.
- உங்களின் மாத மின்சாரச் செலவை பரிசோதித்து, மின்சாரப் பயன்பாட்டை முடிந்தளவு குறைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
- மின்விசிறிகளில் மின்ணணு ரெகுலேட்டரை உபயோகியுங்கள்
- விளக்குகளில் 40 W டியூப் ¨லைட்டிற்கு பதில் 36 W மென்விளக்கைப் பயன்படுத்துங்கள்.
- ஆடைகளை உலர்த்துவதற்கு விளக்கு பொருத்திகளையோ, ஒயரையோ பயன்படுத்தாதீர்கள்.
- ஃப்யூஸ் போன விளக்கை மின் இணைப்பைத் துண்டித்த பின் மாற்றுங்கள்.
- மின் விளக்குகளின் பயன்பாட்டைக் குறைக்க, சுவர்களுக்கு லைட் கலர் வர்ணம் பூசுங்கள்.
- வாஷிங் மெஷின் மற்றும் டிரையரில் அதிகளவு மற்றும் குறைந்த அளவு ஆடைகளை போடுவதை விடுத்து எப்போதும் முழுமையான அளவு ஆடைகளையே துவைத்து உலர்த்துங்கள்.
- கணினியில் எந்தவிதமான ஸ்க்ரீன் சேவர்ஸையும் பயன்படுத்தாமல் sleep mode பயன்படுத்துவதன் மூலம் 75% மின்சாரப் பயன்பாடு குறைக்கப்படும்.
- குளிர்சாதனப் பெட்டியில் அளவுக்கு அதிகமாக பொருட்களை அடைக்காமலும், காற்றோட்டமாக இருக்கும்படியும் பார்த்துக் கொள்ளுங்கள்.
- மூடாமல் எந்தவொரு உணவையும் குளிர்சாதப் பெட்டியில் வைக்காதீர்கள். அதனால் கம்பரஸரின் வேலைத்திறன் குறையாமல் இருக்கும்.
- ஒரு வேளைக்கு தேவையான காய்கறிகள், இறைச்சி போன்றவற்றை ஒரே முறையில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுங்கள்.
- உங்கள் வாட்டர் ஹீட்டரை 50 – 60 deg C -க்குள் ¨வைப்பதன் மூலம் தண்ணீர் சூடாக்கும் மின்சாரச் செலவை 10% குறைக்கலாம்.
- டிஷ்வாஷரில் ஒருவேளை temperature booster இல்லையென்றால் 60 deg C பயன்படுத்துங்கள்.
- வருடத்திற்கு ஒருமுறை ஒரு பக்கெட் தண்ணீரை ஹீட்டருக்கு அடியில் ஊற்றுவதால் அதன் அடிப்புற அழுக்குகள் நீக்கப்பட்டு செயல்திறன் அதிகரிக்கும்.
- ஹீட்டருக்கும் அத்தண்ணீரை தரும் குழாய்க்கும் உள்ள தொலைவு குறைவாக இருந்தால், பைப்பின் வழியே சூடு வெளியேறுவதைத் தடுக்கலாம்.
- சுடுதண்ணீர் வரும் குழாயை முறையாக உறை போட்டுப் பாதுகாப்பது நல்லது
- அறையின் மூலையில் சுவர்களுக்கு அருகே விளக்குகளைப் பொருத்துவதன் மூலம் வெளிச்சம் அறையின் இரு சுவர்களிலும் பட்டு எதிரொளிக்கும்.
- உங்களுக்குத் தேவையான அளவிற்கு மட்டும் தண்ணீரை சூடாக்குங்கள். அது டீ குடிக்கவோ, குளிக்கவோ எதற்காயினும்.
மின்வெட்டு இருக்கும் போது மட்டும் பிள்ளைகள், அக்கம் பக்கத்தாருடன் அரட்டை, பூங்கா போன்ற வெளியிடங்களுக்கு செல்லுவதை விடுத்து, தினமும் அவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் உறவுகள் செழிப்பதுடன், மின்சாரத்தையும் மிச்சப்படுத்தி நாம் வாழ்வதற்கு இருக்கும் ஒரேயொரு பூமியையும் நலமுடன் வாழ வைக்கலாம். வெப்ப சுனாமியை வீழ்த்த உங்களால் முடிந்தளவு மின்சார சேமிப்பை செயல்படுத்துவதுடன், தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லுங்கள்.
(முற்றும்)”
அருமையான தகவல்கள்
மிக்க நன்றி
இர.பன்னீர் செல்வம்
very good. We can follow for saving current.