மிளகு குழம்பு

தேவையான பொருட்கள்
புளி – ஒரு நார்த்தங்காய் அளவு
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – 3 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் -2 டீஸ்பூன்
எண்ணெய் -5 டேபிள் ஸ்பூன்
கடுகு -2 டீஸ்பூன்
நெய் -2 டீஸ்பூன்
வெல்லம் – சிறிதளவு

வறுத்து அரைக்க வேண்டியவை

மிளகு – 4 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 4
கறிவேப்பிலை -1 கொத்து(வறுக்க வேண்டாம்)

செய்முறை

புளியை வெந்நீரில் போட்டு ஊற வைக்கவும்.புளி ஊறியதும் அதோடு வறுத்த பொருள்களையும், கறிவேப்பிலையையும் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி புளியில் இருக்கும் கோதுகளை நீக்கி சுத்தம் செய்து வைக்கவும்.

வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகை தளித்து அரைத்து சுத்தம் செய்து வைத்திருக்கும் விழுதை ஊற்றவும். மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயத்தூள் வெல்லத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் அடுப்பை மிதமான தழலில் வைக்கவும். குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் பிரித்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும். இறக்கி வைப்பதற்கு முன் நெய்யை ஊற்றவும்.

இது 10 நாட்களுக்கு மேல் கெடாமல் இருக்கும். வயிறு உபாதைகள் நீங்குவதற்கு இக்குழம்பு சிறந்ததாகும்.

About The Author