ஆந்திராவில் உள்ள கம்மம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் மாதவி லதா. ‘Yes we too can’ என்ற தன்னுடைய அபாரமான திட்டத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மன வளர்ச்சியற்றவர்களுக்கு விளையாட்டுத்துறையின் முக்கியத்துவத்தை உணர்த்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரை நிலாச்சாரல் வாசக வட்டத்தினிடையே கொண்டு செல்லும் பொருட்டு அலைபேசி மூலம் தொடர்பு கொண்டோம்.
ஆந்திராவின் பின் தங்கிய ஒரு கிராமத்தில் பிறந்த மாதவி தன் ஏழாவது மாதத்திலேயே போலியோவினால் பாதிக்கப்பட்டார். ஆனபோதிலும், மனம் தளராமல், நன்கு பயின்று, வாழ்க்கை தந்த கடும் போராட்டங்களையெல்லாம் வென்றெடுத்து, இன்று ‘ஸ்டாண்டர்ட் சார்டர்ட் ஸ்கோப் இண்டர்னேஷனல்’ எனும் நிறுவனத்தில் தலைமை மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு "Most encouraging sport person" என்னும் விருதையும் வென்றவர் இவர். மாற்றுத் திறனாளிகளுக்காக விளையாட்டுப் பயிலகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
சார்ட்டட் அக்கவுண்டில் உலகத்தர சான்றிதழ்களைப் பெற்றிருக்கும் மாதவி தன்னுடைய ஆளுமைத்திறன் வளர்ச்சிக்கு தான் வாசித்த எண்ணிலடங்கா நூல்களே காரணம் என்கிறார். புத்தக வாசிப்பு நம்மை நமக்கு அடையாளம் காட்டும் என்று புளகாங்கிதம் அடைகிறார்.
யாரையும் சார்ந்திரா தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் மாதவி அதற்கென பிரத்யேக செயல்களில் ஈடுபடுவது தன்னுடைய தன்னம்பிக்கையை வெகுவாக அதிகரிக்கிறது என்கிறார். வாகனம் ஓட்டப் பழகி யாருடைய துணையுமின்றி முதன்முறையாக ஊரைச் சுற்றி வரும்போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை என குதூகலிக்கிறார் அவர்.
நிலாச்சாரல் வாசகர்களுக்காக தம் இதயம் மலர்ந்து அவரளித்த பிரத்யேக தொலை-நேர்காணலைக் கேட்போம்.. வாருங்கள் அன்பர்களே..
“