மல்டிகீரைச் சப்பாத்தி

தேவையானவை:

கோதுமை மாவு – 2 கோப்பை,
பசலைக் கீரை – அரை கட்டு,
வெந்தயக்கீரை – அரை கட்டு,
ஓமம் – ஒரு தேக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு,
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி,
மிளகாய்த் தூள் – கால் தேக்கரண்டி,
கரம் மசாலாத் தூள் – கால் தேக்கரண்டி,
பச்சை மிளகாய் – 1.

செய்முறை:

முதலில் பசலைக் கீரையையும், வெந்தயக் கீரையையும் காம்பு கிள்ளி, அலசி மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு ஓமம், மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத் தூள், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் சேர்த்து, மின் அம்மியில் (மிக்ஸி) அரைத்து, வடிகட்டி, சாற்றைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது கோதுமை மாவில் இந்தச் சாற்றைக் கலந்து, பசலைக் கீரையையும், வெந்தயக்கீரையையும் போட்டு, சிறிது வெதுவெதுப்பான நீரை ஊற்றிப் பிசைந்து, காற்று புகாமல் மூடி வையுங்கள். அந்த வெந்நீரின் சூட்டிலேயே கீரைகள் வெந்துவிடும்

பின்னர், தோசைக்கல் வைத்து, பிசைந்த மாவைச் சப்பாத்திகளாகத் திரட்டிப் போட  வேண்டும்! சப்பாத்தியை நன்றாகத் திருப்பித் திருப்பிப் போட்டு வேக வைக்க வேண்டும். சத்தான கீரை சப்பாத்தி ரெடி! சப்ஜி இதற்கு ஏற்ற சைட்டிஷ். சப்ஜியுடன் இதைச் சுவைத்துப் பாருங்கள்! உங்கள் அனுபவத்தை மறவாமல் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author