மலரின் கவிதைகள்…..

இலையாய் இருந்தால் உதிர்ந்திருப்பேன்
காயாயிருந்தால் கனிந்திருப்பேன்
வேராயிருந்திருந்தால் நிலைத்திருப்பேன்
அனல்…
மலராய் இருப்பதால் தான் வாடுகிறேன்…

***

என்றாவது என் மணம் அன்றி
என் மனம் புரிந்தால்
மனிதா என்னை நீ பறிக்க மாட்டாய்!

***

உறவின் உன்னதம் தெரியாதவர்களே
ஒரு நாள் வாழ்ந்தாலும்
எதற்காகவும் நான் என் வேரை மறப்பதில்லை!

***

கொல்லையில் நீங்கள்
எஙகளை ஒதுக்கி வைத்தாலும்
நட்ட மனிதற்கு
நன் மலராய் நன்றி புரிவோம்
நன் மணம் பரப்பி

***

பிறக்கும் மலர்கள்
இறைவன் இருப்பிடம்
இல்லை
மனிதர் இறப்பிடம்
எதுவாய் இருப்பினும்
இதழ் விரித்து
புன்னகைக்கும் பூக்கள்
வாழ்க்கையின் விளக்கம்

****

About The Author

10 Comments

  1. Rajeswaran.S

    hai friend malar… i had seen ur poets and the poets are so nice…. thanks for the poets…

  2. சின்ன வீரப்பன்

    கருத்து புதையல் நன்றாக உள்ளது

    சின்ன வீரப்பன்

  3. thirunavukkarasu

    உங்கள் கவிதை மிக அழகான, மிக நுண்ணியமான உங்களுடைய படைப்பு திறனை கண்டு மகிழ்கிறேன். வாழ்த்துகிறேன். லட்சுமணதிரு

  4. prakash

    மலரின் நிலயில் இருந்து யொசித்த கர்பனைகு பாராட்டுக்கல்

Comments are closed.