வீட்டிற்குள் வந்ததும் கிசுகிசுத்தாள் கமலம். "டேய்! உன் புதுப்பொண்டாட்டி ரகசியமா ஒரு ஃபோட்டோவை மறைச்சி வைச்சிப் பார்த்துட்டு இருக்காடா. ஒரு வேளை ஏதாவது லவ் கிவ்னு கிளம்புமா?"
அதிர்ந்து விட்டான். படுக்கையறையில் மறைவாக அந்தப் படத்தை வைத்துப் பார்க்கிறாள். விடக்கூடாது இவளை. கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும்.
பிடுங்கினான். ஒரு பையனின் படம். ப்ளஸ் டூ படிக்கிற வயசில் அம்சமாக இருந்தான். இப்போதெல்லாம் பத்திரிகைகளில் போடுகிறார்களே, குடும்பப் பெண்களுக்கு சின்னப் பையன்கள் சப்ளை செய்யப்படுவதாக! இவள் அது போன்ற பழக்கம் உள்ளவளா? கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விடலாமா?
அவன் யாரென்று சொல்ல மறுத்தாள்.அவள் கழுத்தைப் பிடித்துத் தள்ளவும், வாசலில் அவள் அப்பா எதேச்சையாக வரவும் சரியாக இருந்தது.
"நான் உண்மையைச் சொல்றேன் , மாப்பிள்ளை. அது என் மகன்தான். ப்ளஸ் டூ படிக்கும்போது சேலத்துக்கு ஓடிப் போனவன் அரவாணியாகி விட்டான். வீட்டுக்கே வரலை. தன் கல்யாணத்துக்கு அவன் வரலையேங்கற கவலை இவளுக்கு"
"ஸாரி புவனா. உன் தம்பியை வரவழைச்சு நாம படிக்க வைப்போம். கவலைப்படாதே" என்றான்.
என்ன குப்பை இது?