ஹெச்.ஐ.வியைத் தடுக்கும் ஆண் ஜனன உறுப்பின் முன் தோல் அகற்றும் முறை
2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் நேஷனல் ஹெல்த் இன்ஸ்டிடியூட்ஸ் ஆஃப் ஹெல்த் ஆண்களின் ஜனன உறுப்பின் முன் தோலை அகற்றுவதினால் அவர்களுக்கு ஹெச்.ஐ.வி பரவும் அபாயம் வெகுவாகக் குறைந்துள்ளது என்பதை இரண்டு சோதனைகள் மூலம் கண்டறிந்தது. இந்த இரண்டு சோதனைகளின் முடிவும் உலகின் பிரபல மருத்துவ இதழான லான்செட்டில் பிரசுரிக்கப்பட்டுவிட்டது.
கென்யாவில் கிசுமுவிலும், உகாண்டாவில் ரேகாயிலும் ஹெச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டிருந்த 7780 பேரில் இருவரைப் பொறுக்கி எடுத்து சோதனை நடத்தப்பட்டது. இப்படி மருத்துவ முறை மூலமாக ஜனன உறுப்பு முன் தோல் அகற்றப்பட்ட ஆண்களுக்கு பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதில் 51 சதவிகிதம் ஹெச்.ஐ.வி பாதிப்பு குறைந்து ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டது.
லான்செட் பத்திரிகையாசிரியர்கள் இந்தக் கண்டுபிடிப்பை "ஹெச்.ஐ.வி தடுப்பில் ஒரு புது யுக ஆரம்பம்" என்று வர்ணித்துள்ளனர். இப்படி ஆண்கள் செய்து கொள்வதால் பாலியல் நோய்கள் பெண்களுக்கும் வராமல் இருக்குமா என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மெடாஸ்டாடிக் மார்பக புற்றுநோய்க்குப் புதிய சோதனை
மெடாஸ்டாடிக் மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய சர்ஜன்கள் இப்போது வேகமான முறை ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். அமெரிக்க ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன் (Food and Drug Administration) மூலக்கூறு சோதனைக்கு அனுமதி அளித்ததன் மூலமாக இப்படி உடனடியாக மெடாஸ்டாடிக் மார்பக கான்ஸர் உள்ளதா என்பதை அறிய முடியும்.
இதுவரை சர்ஜன்கள் நோயாளியின் லும்பக்டோமி அல்லது மாஸ்டெக்டோமியின்போது மார்பகத்தின் அருகில் உள்ள சென்டினல் நோடை சோதனை செய்வது வழக்கம். அங்கு திசுக்களில் ட்யூமர் செல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மேலும் லிம்ப் நோட்களை எடுத்து பரிசோதனை செய்வர். ஆனால் மேலும் கான்ஸரை உறுதி செய்வதற்காக மைக்ரோஸ்கோபிக் சோதனை இன்னும் விரிவான அளவில் செய்தாக வேண்டும்.
இதில் பிரச்சினை என்னவெனில் லாப் முடிவு தெரிய குறைந்த பட்சம் இரண்டு நாட்களாவது ஆகும். இதனால் பெண்கள் இன்னும் ஒரு சர்ஜரிக்கு ஆளாகலாம்! ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்ட ஜெனிசெர்ச் பி.எல்.என் அஸ்ஸே என்ற பெயரைக் கொண்ட இந்த சோதனை முறை மூலமாக முதல் சர்ஜரியின்போதே டாக்டர்கள் துல்லியமாக மாலிக்யுலர் மார்கர்களை அளந்து மார்பகப் புற்று நோய் உள்ளதா இல்லையா என்பதை அறிந்து விட முடியும்! ஒரு வேளை புற்று நோய் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக பாதிக்கப்பட்ட லிம்ப் நோட்களை அகற்றி நோயாளியைக் காப்பாற்றி விட முடியும்.
பெண்களை பயமுறுத்தும் மார்பகப் புற்று நோய்க்கு இந்தக் கண்டுபிடிப்பு ஒரு பெரிய வரபிரசாதம் என்பதில் ஐயமில்லை!”
இந்த முன் தோல் நீக்கும் முரையானது ஆயிரத்தி நானூரு ஆன்டுகலுக்கும் மேலாக முச்லீம்கலும், யூதர்கலும் செய்து வருகிரார்கல்…