மரம்

மரம் விழுந்து விட்டதாய்த்தான்
வந்து சொன்னார்கள்.
ஓடிப் போனோம் எல்லோரும்.
சியாமளா வலி எடுத்து
பிரசவித்தது
அதன் கீழ்தானாம்.
முருகனும் கலாவும்
முதன் முதலில்
காதல் சொல்லிக் கொண்டதும்
அதன் நிழலில்தானாம்.
தாத்தாவின் கடைசி மூச்சு
பிரிந்தது அங்கே என
பாட்டி பெருமூச்சு விட்டார்..!
விறகு எடை
எத்தனை என்று
ஆளுக்காள் அலசிக் கொண்டிருக்க
எங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையை
மீண்டும் பிரதி
எடுத்தோம் ஓரமாய் அமர்ந்து
கண்களில் நீர் கசிய.

About The Author

2 Comments

  1. சோமா

    ரிஷபன் அவர்களே…தங்களது கவிதை கதையாய் மட்டுமே விரிகிறது. கவிதைக்கான வார்த்தை அழகும் ஆழமும் கொஞ்சம் செறிவாய் இருந்தால் நலம் பயக்கும் – சோமா

  2. ரிஷபன்

    தங்கள் கருத்திற்கு நன்றி சோமா. கவிதையில் இதுவும் ஒரு பாணி.

Comments are closed.