பறவையொன்று பதியிழந்து
பனி படர்ந்த கிளையமர்ந்து
சிறகடித்து வெடவெடக்கச்
சீவனோய்ந்து மாய்ந்தது
உறைத்து வாட்டும் காற்று மேலே
ஊர்ந்து மெள்ளச் சென்றது;
உளைந்து போன ஓடை கீழே
ஓட்டமற்று நின்றது
மரங்கள் முற்றும் இலையுதிர்ந்து
மண்ணின் மீது நிலைத்தன
அரவணைக்கு மனமதியாலே
ஆக்கந்தேய்ந் தழிந்தது
இயக்கும் சக்தி அன்னே தேவி
இன்புறத் துயின்றிட
இயற்கையெங்குந் தேக்கமுற்று
அசைவிலாது ஓய்ந்தது
சாவு சாவு சாவுதான்
சகத்திலெங்கும் நிலவுது!
பூவும் வாடிப் போகுது
பூமி சுற்றித் தேயுது