மனித உயிர்மத்தில் (Gene), பிறக்கும்போதே இருக்கும் பல குணாதிசயங்களுள் பின்னால் வரும் நோய்களின் சாத்தியக் கூறுகளும் அடங்கும். நோய்களைப் பொறுத்தவரை, முன்கூட்டியே அறிதல் என்பது இது வரை இந்தியாவில் ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வந்திருக்கிறது. அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக இந்திய விஞ்ஞானிகளும் இந்தத் துறையில் செயல்படத் துவங்கிவிட்டார்கள்.
நாம் உடல்நலத்துடன் இருக்கும்போதே பின்னால் வர இருக்கும் நோய்களைப் பற்றிய விவரங்கள் (உ.ம் இரத்தக் கொதிப்பு, நீரிழிவு, ஆஸ்துமா, புற்று நோய்) கண்டுபிடிக்கப்பட்டால், அவைகள் வராமல் தடுக்க தற்காப்பு மருத்துவத்திற்கு தயாராகலாம்.
உயிர்ம ஆய்வின்படி தனிப்பட்ட உயிர்மத்தில் உள்ள குணாதிசயங்கள், எவ்வளவு காலம் வாழ முடியும் என்ற பல விஷயங்களை அறிய முடியும்.
இந்தியாவில், வெகு சமீபத்தில், முதன் முதலாக Institute of Genomics & Integrative Biology (IGIB) (under the Council of Scientific and Industrial Research (CSIR) என்ற மையத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜேஷ் கோகலே அவர்களின் மேற்பார்வையில் ஒரு விஞ்ஞானிகள் குழு அமைக்கப்பட்டு மனித உயிர்மத்தில் உள்ள நோய் சம்பந்தப்பட்ட இரகசியங்களின் முடிச்சு அவிழ்க்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவின் மற்ற விஞ்ஞானிகள் திரு.ஷ்ரீதர் சிவசுப்பு, டாக்டர் வினோத், Prof.ஸமீர் கே.ப்ரம்மச்சாரி ஆகியோர் ஆவர்.
இதன்படி, மனிதனுக்கு இப்போதே பின்னால் வரப்போகும் நோய்களைக் கண்டுபிடித்து தற்காப்பு மருத்துவ நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம்.
இந்தச் சாதனையின் மூலம் உலக விஞ்ஞான அரங்கில் எல்லோரது கவனத்தையும் நமது தாயகம் ஈர்த்து விட்டது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சீனா, கொரியா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கும் ஓர் இடம் கிடைத்து விட்டது.
இந்த முயற்சியில் ஜார்கண்டைச் சேர்ந்த 55 வயதை அடைந்த ஒரு ஆரோக்கியமான மனிதரின் உயிர்மம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆராய்ச்சியின் முடிவு சில அதிர்ச்சித் தகவல்களைத் தந்தது. இவருக்கு Bipolar disorder, collateral cancer, ulcer, coronary diseases ஆகிய நோய்கள் வரக்கூடும் என்பது தெரிய வந்துள்ளது.
இன்றைய நாளில் திடீரென்று தோன்றும் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டோர் அதன் தீவிரம் எவ்வளவு என்று கண்டுபிடிக்கும் முன்னரே இறந்து விடுவதைக் காண்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மேற்கண்ட உயிர்மத் தொடராக்க (genetic sequencing) ஆய்வின் வெற்றி நமக்குக் கிடைத்த வரப்ரசாதமே.
விஞ்ஞானிகள் குழு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
1.ஒரு குறிப்பிட்ட பிரிவினைச் சேர்ந்த (உ.ம். அகர்வால், ஷர்மா குடும்பத்தினர்) மக்களின் உயிர்மம் சோதனைக்கு உட்படுத்தப்படுவதன் மூலம் குறிப்பிட்ட பிரிவினருக்கு எப்படிப்பட்ட நோய்கள் வர இருக்கின்றன என்பது அறியப்பட இருக்கிறது.
2.இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ள ஒரு சில மக்களின் உயிர்மத்தை சோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் அந்த மாநிலப் பகுதியில் எப்படிப்பட்ட நோய்கள் வரக்கூடும் என்று அறியப்பட இருக்கிறது.
3.ஏற்கனவே உயிர்ம சோதனைக்கு 10 நபர்கள் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டு சோதனை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
(இந்த விவரங்கள் DNA News Bangalore daily news and analysis பத்திரிகையில் 9.12.2009 அன்று ”Know what’s in your genes” என்ற தலைப்பில் வெளியான செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்டது.))
Yes, it is an advance in science alright. Diagnostics have made lots of headway in health matters. But knowing I will get cancer in 20 years will not do me any good unless it can be cut short right away. Cancer and some other diseases are still not understood properly. Even now cancer can only be treated in a majority of cases which will enable one to postpone death by a few years at best. Susceptibility to cancer based on genetic characteristics is not the whole story. There is another discipline called epigenetics which can cause havoc too. There are two factors in any disease development. Nature and environment (this is personal and not global environment such as climate etc.,) If someone has poor diet habits, health habits, and lifestyle habits that can complicate life even for genetically clean” people. Unless people themselves are subjected to genetic engineering (which is a long shot) knowing whether someone will get cancer down the road is not helpful.”