களம் பல கடந்து
காலம் பல கண்டாலும்
மனம் உனைக் கடக்கவில்லை
நிலம் பல கண்டு
நேரம் பல கண்டாலும்
சிந்தையில் உனையன்றி
வேறேதும் காண்கிலேன்!
நெஞ்சமெனும் தோட்டத்தில்
நட்டு வைத்த விதையெல்லாம்
இன்று செடியாகி
மொட்டுவிட்டு மலர்கையில்
பரப்பும் மணமெல்லாம்
உன் மணம்தான்
நிறைவது என் மனம்தான்
காலமெனும் தூவாளியில்
நேசமெனும் நீரூற்றி
நித்தம் நாம் வளர்த்த
காதலெனும் மலர்
கண்முன்னே நிறம்காட்டி
நாசியெல்லாம் மணம்கூட்டி
இன்று
ஏகாந்த இனிமை தருகுதடி
எனக்கிந்த வாழ்வு
போதுமென்றே
எண்ணத் தோணுதடி
என் தோழியே!
“
Tamil Manam Nirantha
Intha Kavithaiyine Pola
Eni Dinam Thorum,Ethu Pol
Manam Magilvikkum
Kavithaiyine Kanboma, Ena
Engalian Manathail
Kelvi enum vithaiyai vidaithu senray Thoalaaa!
Nice. Normally I wouldn’t read a complete Kavithai; because I lose interest very easily. This one I read it completely. Thanks for sharing.
அருமையான வரிகள்!!!!/களம் பல கடந்து காலம் பல கண்டாலும் மனம் உனைக் கடக்கவில்லை நிலம் பல கண்டுநேரம் பல கண்டாலும் சிந்தையில் உனையன்றி வேறேதும் காண்கிலேன்! எனக்கிந்த வாழ்வுபோதுமென்றே எண்ணத் தோணுதடி என் தோழியே/ கருத்தாழம் மிக்க கவிதைகள் இன்னும் வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறதே!!
Very Nice, Keep it up good work.
Simply superb.
தோழன், டி.யு.குமார், ஹேமா, ரகு & கோவேந்தன் – அனைவருக்கும் நன்றி.