மனதோடு மழைக்காலம்

ஒரு மழைநாளில்
குடை பிடித்திடித்திருந்தேன்
நீ நனையக்கூடாதென
மழையில் நனைந்தபடி….

உன்னை நனைக்க வந்த
மழைத்துளிகள் எல்லாம்
கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தன
குடையோரக் கம்பிகளில்…..

குடையின் உள்ளே
கம்பிகளெல்லாம்
சிலிர்த்துக் கொண்டிருந்தன
உன்னைப் பார்த்தபடி……

உன் அழகைப் படம் பிடிக்க
அடிக்கடி வந்து ஃப்ளாஷ்
அடித்துவிட்டுப் போகிறது
மின்னல் ஒளி…..

மின்னல் ஓளியில் உன் அழகைக்
கண்டு ரசிக்க முட்டி மோதி
சண்டையிட்டுக் கொள்கின்றன
மேகங்கள் எல்லாம்…….

மேகங்களெல்லாம் உன்னை
நனையச் சொல்லி
மிரட்டிக் கொண்டிருக்கின்றன
இடியோசைகளாய்…….

எவ்வளவோ முயன்றும்
கடைசியில் தோற்றுப் போகிறது
என்னிடம் குடையைப்
பறிக்க முயற்சித்த காற்று……

மழைத் துளிகளிடமிருந்து
எப்படியோ உன்னைக்
காப்பாற்றி விட்டதாய்
நான் மகிழ்கையில்

காலடியில் திடீரென சிரிப்பொலி
உன் பாதம் நனைத்த
மழைத் துளிகளெல்லாம்
துள்ளிக் குதித்தோடின
என்னைப் பார்த்து
ஏளனமாய்ச் சிரித்தபடி…!

About The Author

9 Comments

  1. P.Balakrishnan

    ப்ளாஷ் அடித்துவிட்டு என்பதற்கு பதிலாய் பளிச்சிட்டு என்று தமிழில் குறிப்பிடலாம் .அருமையான கற்பனை.பாராட்டுகள் ! -அரிமா இளங்கண்ணன்

  2. E.Govindrajan

    கவிதையின் ஏழாவது வரியில் வடித்துகொண்டிருக்கின்றன என்னும் வார்த்தை வறூத்துக்கொண்டிருக்கின்றன என தவறாக அச்சிடப்பட்டிருக்கிறது தயவுசெய்து அவ்வார்த்தையை திருத்தி வாசிக்கவும்

    நிலாச்சாரலுக்கு என் நன்றிகள்…………

  3. dhinakaran

    மனதோடு மலைக்காலம் கவிதை மிக அருமையாக இருக்கிறது

  4. Balapreethi

    மிகவும் அருமை தோழரெ மிக்க நன்றி 🙂

Comments are closed.