அத்துவானக் காட்டில்
அந்தரத்து நிலவப்
பார்த்தபடிக் காவல்காத்து
வளர்த்தெடுத்த
கடலச்செடி மொச்சச்செடி
கொத்துக் கொத்தா
அகப்படும் மம்பட்டிக்கு
படி ரெண்டு ரூபா
மரக்கால் அஞ்சு ரூபான்னு
டவுனுச் சந்தையில
கூவிக்கூவிச் சேர்த்த காசு
பாட்டன் வாங்கி வச்ச
கந்து வட்டிக்கு மிஞ்சாது.
பசேல்னு ஆறுமாசம்
வெக்கையில ஆறுமாசம்னு
காடும் வீடும் துரத்த
சித்தாளா டவுனுக்குப்
பயணப்படணும்
காலி வயித்த நிரப்ப
மம்பட்டியத் தூக்கிக்கிட்டு!