மணத்தக்காளிக் கீரை – பயற்றம்பருப்பு கூட்டு

பயற்றம்பருப்பு சேர்த்துத் தயாரிக்கப்படும் மணத்தக்காளிக் கீரை கூட்டு, வயிற்றுப்புண்ணையும், வாய்ப்புண்ணையும் குணப்படுத்தக்கூடியது.

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளிக் கீரை – ஒரு கட்டு
பயத்தம்பருப்பு – ஒரு கப்
முந்திரிப்பருப்பு (அ) வெள்ளரி விதை – ஒரு மேசைக்கரண்டி
உப்பு – சுவைக்கு
பால் – அரை கப்
தேங்காய்த் துருவல் – ஒன்றரை மேசைக்கரண்டி
நெய் – அரை தேக்கரண்டி
மோர் மிளகாய் – ஒன்று
உளுத்தம்பருப்பு – அரை தேக்கரண்டி

செய்முறை:

மணத்தக்காளிக் கீரையை நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிக் கொண்டு பயத்தம்பருப்புடன் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

முந்திரிப் பருப்பு (அ) வெள்ளரி விதையை தேங்காய்த் துருவலுடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். நெய்யை சற்று சூடாக்கி, மோர் மிளகாயையும், உளுத்தம்பருப்பையும் வறுத்து, அரைத்த விழுதுட‎ன் சேர்த்து, பால் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடும்பொழுது, இனிப்பு சுவையை விரும்புபவர்கள் சர்க்கரையுடனும், காரசாரமாக வேண்டினால் ஊறுகாயுடனும் உண்ணலாம்.

*****

மணத்தக்காளிக் கீரை – தயிர் பச்சடி

இதே மணத்தக்காளிக் கீரையை நன்றாகக் கழுவிய பிறகு, இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து சிறிது எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும். சிறிது தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து அரைத்து, தயிரில் கலந்து சாப்பிட சுவையான எளிய தயிர் பச்சடி தயார்.

*****

About The Author

1 Comment

Comments are closed.