மடை திறந்து… (5)

என்னப்பா, வாழ்க்கை எப்படி போகுது? இங்கே எல்லாம் நலமே!

போனவாரம் உங்களுடைய பின்னூட்டங்கள் பார்த்து மலைச்சுப் போயிட்டேன்… இந்த அன்பைப் பெற என்ன தவம் செய்தேன்னு மனம் நெகிழ்ந்திருச்சு. நன்றி, நண்பர்களே!

லீலா, மைத்ரேயி,
தங்கிலீஷ் டைப்பிங் ரொம்ப ரொம்ப ஈஸி… சித்திரமும் கைப்பழக்கம்தானே? உதவி இணையமெங்கும் இறைஞ்சு கிடக்கு. அது சரிவரலைன்னா நீங்க ஏன் ஒலி வடிவத்தில உங்க அனுபவங்களைப் பகிர்ந்துக்கக் கூடாது?

ஷாந்தி,
So Sweet of you… அது எங்களோட மெர்க் இல்லை. எங்களோடது எலக்ட்ரிக் ப்ளூ.
உங்களுக்கு தத்துவ நூல்கள் பிடிச்சதுன்னா எக்கார்ட் டோலேயின் ‘பவர் ஆஃப் நௌ’ படிச்சுப் பாருங்க. என்னுடைய புரிதலை வேறொரு தளத்துக்குக் கொண்டு போன நூல் அது.

சுரேஷ்,
நல்ல கேள்வி. மகான்களெல்லாம் இதுக்கு பல தளங்கள்ல பல பரிமாணங்கள்ல பலவிதமா பதிலளிக்கலாம். ஆனா நான் ஒரு சாமானிய மனுஷியா என் அனுபவத்தின் அடிப்படையிலதான் பதில் சொல்லப் போறேன். மகிழ்ச்சிங்கறது நம்ம மனதோட ஒரு நிலை. இது பொதுவா வாழ்க்கையை அல்லது ஒரு நிகழ்வை எப்படி பார்க்கறோம்கறதைப் பொறுத்து ஏற்படுது. இது ஒரு குவளையில பாதி நீர் இருந்தா – குவளை பாதி நிறைஞ்சிருக்கா இல்லை பாதி காலியா இருக்கான்னு உணர்றதில இருக்கு. நம்ம மனசு எப்படி பண்பட்டிருக்குங்கறதைப் பொறுத்துதான் மகிழ்ச்சி இருக்கு.

ஆனா ஆனந்தம்கறது மனதுக்கு அப்பாற்பட்டது. ஆன்மா சம்பந்தப்பட்டது. எந்த எல்லையும் சார்பும் இல்லாதது. (எனக்கெப்படி தெரியும்கறீங்களா? அனுபவம் இருக்கே… அது அப்பறம்)

மனசையும் ஆன்மாவையும் எப்படி அடையாளம் கண்டுக்கறது? நம்ம தலைக்குள்ள சளசளன்னு பேசிட்டிருக்கே ஒண்ணு – அதாங்க நம்ம மனம். இந்த தலைக்குள்ள நடக்கிற பேச்சை பற்றற்று கவனிச்சுப் பார்த்தீங்கன்னா கவனிக்கறவரும் கவனிக்கப்படறவரும் வேற வேறன்னு புரியும். அந்த கவனிக்கறவர்தான் ஆன்மா…

டோலே சொல்றார், மனசோட அடிப்படைக் கட்டமைப்பே திருப்தியின்மை. (அது ஏன்னு ரொம்ப அழகா விளக்கமும் தர்றார்). இந்த மனம்தான் சொல்லுது, ‘ஆகா, நான் பெரிய கார் வாங்கிட்டேன். சந்தோஷமா இருக்கேன்’ ‘ஐயோ, அவன் என்னைவிடப் பெரிய கார் வாங்கிட்டான். வருத்தமா போயிடுச்சி’. சுரேஷோட மனம் சொல்லுது, ‘சந்தோஷம்கறது கட்டுக்கதை’ன்னு.

இப்படி மனம் ஏற்படுத்தற எண்ணங்களெல்லாம் உண்மையா இருக்கணும்னு அவசியமில்லை. அதைப் பிரிச்சுப் பார்க்கற பக்குவம் எப்ப வருது? நம்மோட உண்மையான சாரத்தை நாம உணரும்போது. அதாவது நாம பொதுவா மனதைத்தான் ‘நாம்’னு நினைச்சுக்கறோம். ஆனா, பூவை மலர வைக்கிற, உலகத்தைச் சுற்ற வைக்கிற, நமக்குள்ள மூச்சை ஓடவைக்கிற ஒரு சக்தி இருக்கில்லையா… அதுதான் நமக்குள்ளேயும் இருக்குன்னு உணரும்போது நமக்கு மனசோட புலம்பல்கள் பற்றி அக்கறையில்லாமப் போயிடும். அந்த உள்ளொளி நமக்குள்ள தர்ற அமைதியும் ஆனந்தமும் நம்ம மூலமா வெளிப்படும். (அதனாலதான் ஆன்மீகவாதிகள் ‘ஆனந்தா’ன்னு பேர் சேர்த்துக்கறாங்களோ?)

இது பெரிய்ய்ய்ய்ய சப்ஜெக்ட். அதுனால இப்போதைக்கு தொடரும் போட்றலாம்… இன்னும் தெளிவு பெற உங்களை இன்னும் சில கேள்விகள் கேட்டுப் பாருங்க:

என்ன தேடறீங்க? ஏன் தேடறீங்க? இந்த தேடலை விட்டா என்ன நடக்கும்னு நினைக்கறீங்க?

பாரதி,
மாறி வர்றதுல சந்தோஷம்பா… நானும் உங்க நிலைல இருந்திருக்கேன்… கைவசம் நிறைய அனுபவம் இருக்கு. என்னால மாற முடியும்னா உங்களாலயும் முடியும்…

***

பாரதியோட கமெண்டைப் படிச்ச பின்னே யாருக்காவது தனிப்பட்ட விதத்தில எமோஷனல் சப்போர்ட் தேவைப்பட்டா என்னைத் தொடர்பு கொள்றதுக்காவே ஒரு தனி மின்னஞ்சல் முகவரி நேற்று உருவாக்கினேன்: LLJ.nila அட் Gmail.காம். (Spam வரக்கூடாதுன்னு எப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையா இருக்க வேண்டிருக்கு பாருங்க!). சரியா சொல்லி வச்ச மாதிரி ஒரு பிரச்சினை பற்றிப் பேசணும்னு தனிஅஞ்சல் முகவரி கேட்டிருந்தாங்க ஒரு வாசகி இன்னிக்கு.

பொதுவா யாராவது எங்கிட்ட கஷ்டம்னு சொன்னா என் வேலை வெட்டியெல்லாம் விட்டுட்டு அவங்களை சுகமாக்கறதுல இறங்கிடுவேன். நான் பட்ட கஷ்டம் வேற யாரும் படக்கூடாதுன்னு கிட்டத்தட்ட ஒரு வெறி. இப்போ அது அடங்கிடுச்சு… கருணை இருக்கு. ஆனா வெறி இல்லை. மற்றவங்களோட நலத்துக்கு சுகவர் (healerக்கு என்னோட தமிழாக்கம்… சரியா தப்பான்னெல்லாம் தெரியாது.) எல்லாப் பொறுப்பும் எடுத்துக்கறது சரியில்லைங்கற படிப்பினை கிடைச்சது. ஒவ்வொருத்தரும் அவங்கவங்க வாழ்க்கைக்கு பொறுப்பு எடுத்துக்கணும்னு தெளிவு வந்திருக்கு. குதிரையைத் தண்ணிக்கு அழைச்சிட்டுப் போகத்தான் முடியும்… தண்ணியைக் குடிக்கறது குதிரையோட பொறுப்பில்லையா? அப்படித்தான் சுகம் பெறுவதும். அது உள்ளேர்ந்து வரணும்.

என்னோட அமுதென்னும் நஞ்சென்றும் ஆவியுலக அனுபவக் கட்டுரையைப் படிச்சிட்டு நிறையப் பேர் தொடர்பு கொண்டாங்க. அநேகப் பேருக்கு 1-2 மணி நேரம் செலவு செஞ்சேன். ஆவியுலகத் தொடர்போட மற்ற சுகமளிக்கும் உத்திகளும் கற்றுக் கொடுத்தேன். ஆனா இனி இப்படி இலவசமா செய்யறதில்லைன்னு முடிவு செஞ்சிருக்கேன். யாருக்காவது என்னோட தனிப்பட்ட கவனமோ சேவையயோ தேவைப்பட்டா அவங்க நிலாச்சாரலுக்குக் கட்டணம் செலுத்தணும். இந்தப் பணத்தை நிலாச்சாரலை விரிவுபடுத்தவும் சுகமளிக்கும் உத்திகளை இன்னும் பலருக்கும் பரப்பவும் பயன்படுத்தறதுதான் திட்டம். (((முடிஞ்சப்போ நிலாச்சாரலுக்கு வேலை செய்ய வாங்கப்பா… நம்மையெல்லாம் சேர்த்து வச்ச நிலாச்சாரலுக்கு அணில் போல சின்னச் சின்ன உதவிகள் செய்ய முயற்சிக்கலாமே! நிலாச்சாரலுக்கு பத்து வயசாகப் போகுது மே18ம் தேதி. ஊர் கூடி இழுத்தாத்தானே தேர் நகரும்?))))

உங்க எல்லாருடைய அஞ்சலையும் கண்டிப்பா வாசிப்பேன். முடிஞ்சவரை சின்ன பதில் இங்கேயாவது எழுத முயற்சிப்பேன் (உங்க பேர் சொல்லாமத்தான்). மாதமொருமுறையோ இருமுறையோ எனக்குக் கிடைக்கிற வழிகாட்டுதலின் படி சிலருக்கு இலவசமா தனிப்பட்ட செஷன்ஸ் தர நினைச்சிருக்கேன். பார்ப்போம்… எப்படிப் போகுதுன்னு.

ஒரு சின்ன போட்டி, மக்களே!

மேலே சொன்ன மின்னஞ்சல் முகவரில இருக்கற LLJக்கு விளக்கம் இந்நேரம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும். சரியான விளக்கம் தர்ற முதல் நபருக்கு என்னோட மின்னூல் ஒண்ணு பரிசா தருவேன் (ஹூம்… இதுக்குப் போய் யாராவது மெனக்கெடுவாங்களான்னு சொல்றீங்கதானே?) சரியா மடைதிறந்து படிக்கறீங்களா இல்லையாங்கறதுக்கு இது ஒரு டெஸ்ட்

அப்புறம்… இன்னொரு இன்ப அதிர்ச்சி இந்த வாரம். கொடுத்தது கலையரசி. நம்ம கேட்ட கேள்வில இன்ஸ்பயர் ஆகி நனவோடைன்னு ஒரு கட்டுரை அனுப்பிச்சிருந்தாங்க… காட்டாற்று வெள்ளமா கொட்டித் தள்ளிட்டாங்க. ரொம்ப சரளமா நேர்மையா நெஞ்சிலருந்து எழுதிருந்தாங்க… ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன். கலை மற்ற எல்லாருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனா இருக்கப் போறார்…

கலை, உங்களுக்கு ஒரு பரிசு தர விரும்பறேன். இந்த ரெண்டில எது வேணும்னு நீங்களே தேர்வு செஞ்சு சொல்லுங்க – என்னோட நாவல் பிரதி (இந்தியான்னா அச்சு. வெளிநாடுன்னா மின்பிரதி) அல்லது என்கூட ஒரு சின்ன அரட்டை (கூகிள் டாக் இல்லைன்னா தொலைபேசி)

***

எத்தனை பேர் கண்ணாடிப் பயிற்சி செய்தீங்கன்னு தெரியாது. ஆனா உங்ககிட்டே உங்களுக்குப் பிடிக்காத ஏதாவது ஒரு பண்பை அடையாளம் கண்டிருந்தா, அடுத்த பயிற்சி இங்கே – இந்தக் கேள்விகளை அலசி ஆராயாம, சட்டுன்னு நெஞ்சிலருந்து என்ன பதில் வருதுன்னு பாருங்க:

எத்தனை வருஷமா இந்தப் பண்பு உங்ககிட்டே இருக்கு? அதாவது எத்தனை வருஷமா உங்களை நீங்க கடிஞ்சிட்டிருக்கீங்க? இந்தப் பண்பு உங்ககிட்டே இல்லைன்னா என்னாகும்?

இந்தப் பதில்களை உற்றுப் பாருங்க ஆன்மாவிலருந்து. (நெஞ்சில கை வச்சிக்கறது உதவியா இருக்கும்) இதை சுமந்துக்கிட்டிருக்கறதுனால உங்க மேல உங்களுக்கே கருணை பிறக்குதா இல்லையா? இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தீங்கன்னா நல்ல மாறுதலைப் பார்க்கலாம்.

***

மினி,
சில வருஷம் முன்னால பிங்க் அண்ட் க்ரே காம்பினேஷன்ல ஒரு டிசைனர் ஸாரி வச்சிருந்தேன். சீக்கிரமா வீணா போயிடுச்சு. பின்ன பிங்க் அண்ட் ப்ளூல ஒரு சல்வார் வாங்கினேன் லைஃப் ஸ்டைல்ல. அதுவும் சீக்கிரம் வீணாப் போச்சு.

Nila

போன வருஷம் ஒரு சிந்தடிக் சேலை வாங்கினேன் – என்னோட ஆஸ்தான கடையான தெய்வம் சில்க்ஸ்ல. அது pink and bluish grey. (படத்துல பாருங்க). மெட்டீரியலுக்காகவும் கலருக்காகவும் வாங்கினேன். டிசைன் ரொம்ப பிடிச்சதுன்னு சொல்ல முடியாது. எந்த உடையிலேயும் மெட்டீரியலுக்கு அதிக முக்கியத்துவம் தருவேன்.

***

போன வாரம் Band Baaja Baaraat இந்திப்படம் பார்த்தேன் – சப் டைட்டில் உதவியோடதான்! படம் ஜாலியா இருந்தது. அனுஷ்கா ஷர்மாவோட காஸ்ட்யூம்ஸ் சூப்பர்ப்! காட்சிக்குப் பொருத்தமா அதே சமயம் ரொம்ப நளினமா, நாகரீகமா, யதார்த்தம் மீறாத ஆடைகள்… நான் பிரபலமா ஆகும்போது அவங்களோட காஸ்ட்யூம் டிசைனரைத்தான் கூப்பிடணும்னு இருக்கேன் . தமிழ் நடிகைகள்ல சிம்ரனைத் தவிர வேற யாரும் ஆடைத் தேர்வில என்னைக் கவர்ந்ததில்லை. ரொம்ப மோசம்னு நினைச்சது தேவயானியைத்தான் – அவங்க சினிமால நடிச்ச காலத்தில. தொலைக்காட்சில எப்படியோ தெரியலை. (நம்புங்க… தமிழ் டிவி சேனல்ஸ் எங்ககிட்டே கிடையாது. நெடுந்தொடர்கள் பயமுறுத்தினதால வாங்கறதுல ஆர்வமில்லை)

நிறைய எழுதணும்னு நோட்ஸ் எடுத்து வச்சிருந்தேன். ஆனா பதில்களே நிறைய இடத்தை அடைச்சிக்கிட்டதால, அடுத்த வாரத்திலருந்து பின்னூட்டங்கள் மூலமா பதில் சொல்லிட்டு இன்னும் நிறைய எழுத முயற்சி செய்யறேன். சரியா?

நீங்களும் பேசுவீங்கதானே?

அபரிமிதமான அன்புடன்,
நிலா…

About The Author

21 Comments

  1. கீதா

    Love, Light and Joy. சரிதானே நிலா? நிலாச்சாரலில்தான் என் எழுத்தின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. எத்தனை மேடை ஆடினாலும் அரங்கேற்ற மேடையை மறக்கமுடியுமா? பத்தாவது பிறந்தநாள் காணவிருக்கும் நிலாவின் சாரலில் குளிர்வதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள் நிலா.

  2. Mini

    Nila, Thanks a lot for the Pink and bluish grey saree photo. it is nice. Ungal abrimithamana anbuku nandrigal.

  3. Nila

    கீதா,
    மிகச் சரி… எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பறீங்களா? அதிலேயே மின்னூலை இணைச்சு விட்டுடறேன்… வாழ்த்துக்கள்

  4. Nila

    மினி,
    சனிக்கிழமை இன்னொரு பிங்க் டிசைனர் புடவை கட்டினேன். அப்பதான் கவனிச்சேன். அதுலயும் பெரிய நீலக்கலர் பூக்கள். பார்டர் மஞ்சள்ங்கறதுனால எனக்குத் தோணலை நீங்க கேட்டப்போ. உங்ககிட்டே சொல்லணும்னு நினைச்சேன்.

  5. Suresh

    nila,
    kettute erukalam pola erruku..nenga solrathi ellathiyum 🙂
    enkettum neriya questions erruku… athukku pathil solrathanala unaga diversion mari.. subject mardiutho!
    oru admai chikk tan nnu nenaichen.. (vadivel) oops!!
    please ora oru question mattum .. unmaiyele ennaku ethu pudikuthu ethu pudilalai enn asai enna onnme puraya vellai.. ? ethvathu easy vazhi erruka, ethai therinchia?
    Thanks to answer nila

    Suresh
    Brisbane (Australia)

  6. Mini

    Nila, LLJ – Live life for Justicenu enaku thonuchu. just wanted to share. Justicena fair dealing nu oru meaning parthen. Nammku naam first truthful,faira iruthomuna niraya problems solve agum thonuchu.

    Suresh, Unga kelviku enaku oru bathil thonuchu. just my opinion. lifea en complicate pannikanum niraya yochichu. ungaluku ethu eppa santhosama iruko atha appdiyae enjoy panalamae..naan yochikirathu thappunu sola varala.. but namaku kulpathai kudikira kastatha kudukira thoughtsa othukittu iruntha thappa?

  7. கலையரசி

    நேற்றே பின்னூட்டமிட்டேன். ஆனால் அது வெளிவரவே இல்லை. ஏனென்று தெரியவில்லை. எனவே திரும்பவும் இன்று டைப் செய்கிறேன்.பத்தாம் ஆண்டு நிறைவை நோக்கி நடை போடும் நிலாச்சாரலுக்கு வாழ்த்துக்கள்.
    என் மனவோடையை வெளியிட்டு ஊக்கமளித்த நிலாவுக்கு நன்றி. உங்களது வார்த்தைகள் டானிக் குடித்தது போல் உற்சாகம் தருகின்றன.
    இனி என் பரிசு பற்றி.
    எனக்கு நூலும் வேண்டும்; உங்களுடன் தொலைபேசியில் பேசவும் வேண்டும்.
    நிலாச்சாரலில் கலா என்ற பெயரில் ஏற்கெனவே என் மூன்று பதிவுகள் வெளியாகியுள்ளன. அவற்றையும் கலைய்ரசி என்றே பெயர் மாற்றி விடுங்கள்.
    உங்களது கேள்வி தான் எஙகளைச் சிந்திக்க வைத்து எழுதத்தூண்டுகிறது. எனவே கேளுங்க கேளுங்க, கேட்டுகிட்டே இருஙக
    நன்றி நிலா.

  8. nila

    //எனக்கு நூலும் வேண்டும்; உங்களுடன் தொலைபேசியில் பேசவும் வேண்டும்.//

    :-))
    நூல் கண்டிப்பாய் வரும். தொலைபேசி அழைப்பு… முயற்சிக்கிறேன் 🙂

  9. nila

    Suresh, there are many ways but are they quick fixes? I am not so sure. Try and read the article I wrote on finding our life purpose. It may be useful

  10. manuventhan

    பத்தாம் ஆண்டு நிறைவை நோக்கி நடை போடும் நிலாச்சாரலுக்கு வாழ்த்துக்கள்.

  11. Hema

    Nila, everweek MT is real madai thiranthu……When will you reveal the secret behind necklace????…..say soon…

  12. suresh

    nila,
    mandaikulla pesitu errukarathu – manam
    athai kavanikerathu – athuma
    appo ethai rendaium kavanikka porathu yaru?

    I do wanna donate some bucks ($100) to nila charal, guide me how to do that please.. and keep up good job….

    Suresh
    Brisbane (Australia)

    photola nenga nenutu errukera-pose nalla erukku

  13. nila

    Hema,
    thanks… necklace story… Let me try and include next week. Else very soon. Happy journey. Good luck…I meant to mail you. but really busy…

  14. Hema

    Thanks Nila, due to some delay in my work, I am leaving on march 18…..Will wait to read the story…

  15. Vidhya

    Chutti na enna? Well na nilacharal oda romba nal vasaki. But feed back koduka ipothan thonichu. Nila unga katturaigal romba elimaiya arumaiya iruku. Neenda kala thozhi kuda pesura unarvu erpaduthu. Happy 10th anniversary for Nilacharal. Best wishes!

  16. nila

    சுரேஷ்,
    மின்னஞ்சல் தட்டி விடுங்கள் – உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் நன்கொடை பற்றிப் பேசலாம்… நன்றி

  17. nila

    manuventhan, Vidhya,
    Thanks a lot… this is a two way chat… so keep writing your thoughts too

  18. vimalaramani

    ஊ லோக் சொ பெஔடிfஉல் இன் தட் பின்க் சரே ஈட் இச் அச் கோட் அச் உர் தொஉக்க்ட்ச்! cஒங்ரட்ச்
    நித் லுவ்
    விமல ரமனி

  19. arumugam

    சுபெர்…வெர்ய் வெர்ய் நிcஎ அர்டிcலெ….

  20. vimalaramani

    dear Nila
    My mez look like arabic!
    Here I am sending it in english!
    U look so beautiful in that pink saree It is as good as ur beautiful thoughts
    congrats

    Vimala ramani

Comments are closed.