என்னப்பா, வழக்கம் போல நாமெல்லாரும் நலம்தானே?
‘நீங்கள் மன அழுத்தத்திலிருந்தால் கடந்த காலத்தில் வாழ்கிறீர்கள்; மனப்பதற்றத்திலிருந்தால் எதிர்காலத்தில் வாழ்கிறீர்கள். மன அமைதியிலிருந்தால் நிகழ்காலத்தில் வாழ்கிறீர்கள்’ அப்படிங்கற லா வோட்சுவோட பொன்மொழியை முகநூல்ல போட்டிருந்தேன். பல நண்பர்களுக்கு அது பிடிச்சிருந்தது. நம்மோட மன நிலை எப்படி இருக்கு இப்போ?
யஷ் மனநிறைவோட இருப்பாங்கன்னு நினைக்கிறேன்… பின்னே… சூர்யகலாவையும் ராதாவையும் பெங்களூருல கணினி மற்றும் வாழ்க்கைத் திறன் பயிற்சில கொண்டு சேர்த்து செட்டில் பண்ணிட்டாங்களே! அவங்களோட விடாமுயற்சிக்குக் கண்டிப்பா பெரிய ஓ போடணும். கடைசி நிமிஷம் வரைக்கும் வந்த தடைகளையெல்லாம் ஜான்ஸி ராணி போல எதிர்கொண்டு நடத்திக் காண்பிச்சிட்டாங்க. வெல்டன், Very proud of you, Yash! இந்த ரெண்டு பெண்களும் நல்ல வேலை வாங்கி மற்ற பெண்களுக்கு ஊக்கம் தரணும்னு வாழ்த்துவோம்…
ராதாவோட பயிற்சிக்கு நிதி உதவி செய்யற தி ஆரிஜின் (The Origin) அமைப்பின் Hariயையும் பாராட்டி ஆகணும். சொந்தப் பிரச்சினைகளுக்கு நடுவில ஊர்ப் பிரச்சினைகளையும் முதுகுல சுமக்கறார். உதவி தேவைப்படற பல சேவை நிறுவனங்களை நம்ம கவனத்தில கொண்டு வர்றார். அவங்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்ய முயற்சிகள் நடக்குது.
எனக்கு பொதுவா இந்திய சேவை நிறுவனங்கள் மேல ஒரு வருத்தமுண்டு. பெரும்பாலான நேரங்கள்ல தீர்வுகளை அடைய நிதி திரட்டறதுல மட்டுமே கவனம் இருக்கு. நிதி தீர்வுகளுக்கான ஒரு வழி… அவ்வளவுதான். மற்ற பல வழிகள் இருக்குங்கறதை பல சமயம் கவனத்தில எடுத்துக்க மாட்டேங்கறோம் நாம…
ஒரு உதாரணம் பாருங்க… ஒரு ஆதரவற்ற இல்லத்தில சுமார் 100 குழந்தைகள் இருக்காங்க. அவங்கள்ல சிலர் 13 வயசுக்கு மேல வந்திட்டதால பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனி கட்டிடம் இருக்கணும்னு அரசு ஆணை போட்டுடுச்சு.. இல்லைன்னா இல்லத்தை மூடணும்னு உத்தரவு. பிரச்சினைதான்…. 20 இலட்சம் வேணும் கட்டிடம் கட்ட! ஒரு நிறுவனம் 2 இலட்சம் கொடுத்து உதவி இருக்காங்க. கடகடன்னு தன்னார்வத் தொண்டர்கள் மீதி நிதியைத் திரட்ற வேலைல இறங்கிட்டாங்க. அவங்க ஆர்வத்தை மனசாரப் பாராட்டறேன். நான் அவங்ககிட்டே சில கேள்விகள் கேட்டேன்:
1) நிதி திரட்டி கட்டிடம் கட்ட போதுமான நேரமிருக்கா?
2) அப்படியே இருந்தாலும் கட்டிடம் கட்டுவதை மேலாண்மை செய்ய போதுமான திறன் இருக்கா?
3) குறிப்பிட்ட காலத்துக்குள் போதுமான நிதி திரட்டமுடியவில்லை எனில் திரட்டிய நிதியோ அல்லது அரைகுறையாக நிற்கும் கட்டிடமோ என்ன ஆகும்?
4) அமைப்பை நடத்தும் தனிமனிதருக்குப் பின் அதன் நிலை என்ன?
5) குறுகிய காலத்தில் நிதி திரட்டி, அவசர அவசரமாக கட்டிடம் கட்ட முயல்வதை விட ஒரு நிரந்தரத் தீர்வு கிட்டும் வரை 13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை உதவும் கரங்கள் அல்லது சேவாலயா போன்ற அமைப்புகளில் நான் சேர்க்க உதவினால் ஏற்றுக் கொள்வீர்களா?
என் கேள்விகளுக்கு இதுவரை பதிலில்லைங்கோ…
தோழி ஒருத்திக்கு கொஞ்ச நாள் முன்னால வரைக்கும் பயங்கர மனப்பிரச்சினை. பயம், பதற்றம் இப்படி ஏதாவது இருந்துட்டே இருந்தது. போன முறை இந்தியா போயிருக்கும்போது சுதந்தர உத்தி, தியானம் எல்லாம் அறிமுகப்படுத்தினேன். உடனடியா மாஜிக் போல சரியாகலைன்னாலும் புதுப் புது வழிகள் மென் மேலும் திறந்து மனப்பிரச்சினைகள்லருந்து நல்லா வெளில வந்திட்டா. ஆனா உடல்ல ஏதாவது ஒரு பிரச்சினை மாத்தி மாத்தி.
நமக்குத்தான் சும்மா இருக்க முடியாதே… ‘புதைஞ்சிருக்கற உணர்வுகள் காரணமா இருக்கலாம்… சுதந்திர உத்தி பயன்படுத்திப் பாரு’ன்னு சொல்லிட்டே இருந்தேன். அவ சரி சரின்னு சொன்னாலும் செய்யவே இல்லை. ஒரு நாள் ‘அது எனக்கு வேலை செய்யவே இல்லை. அதான் நான் முயற்சி செய்யலை. தவிர, இது உடல்ல இருக்கற பிரச்சினை. வலியை நானா கற்பனை செஞ்சுக்கலை. வலி என் உடம்புல நிஜமாவே இருக்கு’ன்னா.
அவ சொன்னதுல ரெண்டு விஷயம் இருக்கு:
1) சுதந்திர உத்தி வேலை செய்யலை
2) உடல் வேற… உணர்ச்சிகள் வேற
நான் மேல மேல கேள்விகள் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டது என்னன்னா…. சுதந்திர உத்தி உடனடியா அவளோட எதிர்மறை உணர்ச்சிகளை நீக்கினாலும் அதெல்லாம் திரும்ப வந்திடுச்சு. மற்ற பல உத்திகளை செயல்படுத்தினப்பறம்தான் அவளோட பயம் பதற்றமெல்லாம் நீங்கிச்சு. சரிதான்… அப்படின்னா இந்த மற்ற பல உத்திகளை அவ ஏன் முதல்லேயே பயன்படுத்தலை? அப்போ அவளுக்குத் தெரியலை. சுதந்திர உத்தி மூலமா மனம் தற்காலிகமா தெளிவானதும் புது உத்திகளைக் கண்டுபிடிக்கும் ஆற்றலை உணர முடிஞ்சது… அப்போ அவளோட சுகத்துக்கு மூல காரணமா அமைஞ்சது எது?
நாம மேஜிக் நடக்கலைன்னதும் அதனால பயனே இல்லைன்னு முடிவு செஞ்சு தூக்கிப் போட்டுடறோம். ஆனா எல்லா சுகமளிக்கும் உத்திகளுமே ஏதோ ஒரு விதத்தில சுகத்துகான வழிகளைத் திறக்குதுங்கறதைப் புரிஞ்சிக்கிட்டா விரைவில் சுகமடையலாம்கறதை விளக்கறதுக்காகத்தான் இவ்வளவு சொல்ல வேண்டியதாப் போச்சு.
அடுத்தது… மன உணர்ச்சிகளை சுகப்படுத்தினா எப்படி உடல் வலி சரியாகும்? புதைக்கப்பட்ட எதிர்மறை உணர்ச்சிகளுக்கும் உடல் நலக் குறைவுக்குமான தொடர்பை பற்பல ஆய்வுகள் வெளிக் கொணர்ந்திருக்கு. சமீபத்தில தாரா ப்ராக்கோட சொற்பொழிவில அவங்க சொன்ன உண்மைச் சம்பவம்:
சூசன்ங்கற பெண்மணியோட கணவர் ஒரு விபத்தில இறந்திட்டார். அவரோட இதயத்தை ஒரு 21 வயது இளைஞனுக்குப் பொருத்தினாங்க. அந்த இளைஞனைப் பார்க்கறதுக்கு போனாங்க சூசன். ஒருத்தரை ஒருத்தர் பார்த்ததும் ரெண்டு பேருக்கும் தன்னையறியாமல் கண்ணுல தண்ணி கொட்டுது. வார்த்தைகளே இல்லாம கையைப் பிடிச்சிட்டே கொஞ்ச நேரம் நின்னப்பறம் அந்த இளைஞர், "அறுவை சிகிச்சைக்குப் பிறகு என்னோட விருப்பங்கள்ல நிறைய மாற்றம் இருக்கு என்கிட்டே. சைவ உணவுப் பழக்கத்தைக் கொண்ட எனக்கு பீஃப் சாப்பிடணும்னு பயங்கரமான ஆவலிருக்கு. உங்க கணவருக்குப் பிடிச்ச உணவு என்ன?"ன்னு கேட்டாராம். சூஸன் அசந்து போயிட்டாங்க. ஏன்னா அவங்க கணவரோட விருப்ப உணவு அதுதான். அதே போல, அவங்க கணவருக்குப் பிடிச்ச இசை, வண்ணம்… இப்படி எல்லாமே அந்த இளைஞரைக் கவர ஆரம்பிச்சிருந்தது.
இதிலருந்து, நம்மோட உணர்வுகள் நம்மோட உடலோட ஐக்கியமாகி இருக்குங்கறது புரியுதில்லையா?
நெல்லு விதைச்சா நெல்லு விளையும்… புல்லு விதைச்சா புல்லு விளையும்னு சொல்லுவாங்க இல்லையா…. நாம உடம்பில எதிர்மறை உணர்வுகளை விதைச்சோம்னா உபாதைகள்தான் விளையும்…
ப்ராண்டன் பேய்ஸ் என்கிற பெண்மணி, தன் உணார்வுகளை சுகமாக்கியதன் மூலம் கால்பந்து அளவில வயித்தில வளர்ந்திருந்த கட்டியைத் தானே சுகப்படுத்தி இருக்காங்க. ‘பயணம்’ (Journey) என்கிற ஒரு புது உத்தியையே அவங்க அறிமுகப்படுத்தினாங்க…. Homeopathy மருத்துவர்கள் நோய்களுக்குப் பின்னால இருக்கற மன நிலையையும் உணர்ச்சிகளையும் நல்லா ஆராய்ஞ்சு அதுக்கேத்த மருந்தைத்தான் தருவாங்க. அப்படி சிறுநீரகக் கல்லைக் கரைச்ச கதையைக் கூட சமீபத்தில உறவினர் ஒருவர் என்கிட்ட பகிர்ந்துக்கிட்டார். அதனால உடல் நலக் குறைவு இருந்ததுன்னா உங்க மனதோட நலத்தை முதல்ல ஆராய்ஞ்சு பாருங்க.
டாக்டர் பேக் என்கிற மருத்துவர் காட்டு மலர்கள்லருந்து எடுக்கற எஸ்ஸென்ஸ் மூலமா மனப்பிரச்சனைகளை எளிதா குணப்படுத்தலாம்னு கண்டுபிடிச்சார். இதில என்ன சிறப்புன்னா ஒவ்வொருத்தரும் அவங்கவங்க மனநிலையை கணிச்சு அவர் தந்திருக்கற குறிப்புகளைப் பயன்படுத்தி தங்களோட மருந்தைத் தானே தெரிவு செய்யலாம். எனக்கு இது ரொம்ப பயன்பட்டிருக்கு. இதைப் பற்றி தமிழ்ல கூட நூல்கள் இருக்கு. மலர் மருத்துவம்னு தேடிப் பாருங்க. ஆங்கிலத்தில படிக்க கீழ்க்கண்ட சுட்டி பயன்படலாம்:
http://www.bachcentre.com/centre/remedies.htm
அதுக்கப்பறம் பலர் விலங்குகள், ஸ்படிகங்கள், ரத்தினக் கற்கள் இவற்றோட சாரங்களையெல்லாம் பயன்படுத்தி சுகமடையலாம்னு சொல்றாங்க.
படத்தில் கட்டிருக்கற புடவையோட கலர் காமினேஷனும் டிசைனும் வித்தியாசமா இருந்ததால வாங்கினேன்… எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்ச நகைன்னா அது ஜிமிக்கிதான்… தங்கத்துலதானிருக்கணும்னெல்லாம் அவசியமில்லை…
நித்தமும் புத்துணர்ச்சியோட இருக்க உதவற மிக மிக மிக மிக எளிய பயிற்சிகளைக் கத்துக்க இந்த சுட்டிக்குப் போங்க: மொத்த நீளமே ரெண்டு நிமிஷம்தான்:
http://www.youtube.com/user/WellIntoLife#p/u/5/YGWJextI8io
உங்களுக்குப் புத்துணர்ச்சி தர்ற விஷயங்கள் என்னென்னனு உங்களுக்குத் தெரியுமா? எனக்கு ஒரு பெரிய பட்டியலே இருக்கு:
மலர்கள்
குழந்தைகள் (படங்கள் கூட)
குத்துப் பாடல்கள் (முகமெல்லாம் சுளிக்காதீங்கப்பா….)
நடனம்
…..
…..
…..
கவுண்டர் காமெடி
கவுண்டரோட நடனமே தனி ஜோர்தான்… கவுண்டரை சின்னத் திரையில் கொண்டு வந்த ரோபோ சங்கர் வாழ்க:
http://www.youtube.com/watch?v=XsbUGYYN3ig&feature=related
அவரோட நாம எல்லாருமே வாழ்க!
அடுத்த வாரம் பார்க்கலாம்பா….
அபரிமிதமான அன்புடன்,
நிலா
“
ணில ஆஉடி,
இ லிகெ யொஉர் ச்டொர்ய் அன்ட் சரேச். லொஎவ் யொஉ
சொந்மித்ர சி௯
ரொம்ப நல்லாயிருக்கு
வனக்கம் நிலா யென்க்கு சுகம் செயல்முரையை பட்ட்ரி சொல்ல முடியுமா